Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான் என் பூட்டனை உன் பூட்டன் காலில் செருப்பணிந்ததால் கட்டி வைத்து உதைத்தான் என் பாட்டனை உன் பாட்டன் பறைக்கு எதுக்குடா படிப்பு? என பகடி செய்து ஏசினான் என் அப்பனை உன் அப்பன் "உங்களுக்கென்னப்பா? சர்க்காரு வேலையெல்லாம் உங்க சாதிக்குத்தானே" என சாமர்த்தியம் பேசுகிறாய் நீ ஒன்று செய்! உன்னைறியாத ஊரில் போய் உன்னைப்பறையனென்று சொல் அப்போது புரியும் என் வலி - இராசை கண்மணி ராசா |
![]() |
![]() |
#3 |
|
என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது? தடித்த உம் காவிய இதிகாசங்களில் எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை? எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை? எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல எடுத்துக்கொள்வது எப்படியென நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக் கொண்டிருக்கிறோம் அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம் - ஆதவன் தீட்சண்யா |
![]() |
![]() |
#4 |
|
அங்கே மழை பெய்கிறது!
எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன் |
![]() |
![]() |
#5 |
|
மருதம்
ஊருக்கெல்லாம் கோடியிலே முந்திரிக் கொல்லே உக்காந்தால் ஆள்மறையும் முந்திரிக் கொல்லே செங்கமலம் குளிச்சுப்புட்டு அங்கிருந்தாளாம் ஈரச்சேலை கொம்பில் கட்டி காத்திருந்தாளாம் நாட்டாண்மைக்காரன் மகன் அங்கே போனானாம் வெக்கப்பட்டு செங்கமலம் எந்திரிச்சாளாம் நாட்டாண்மைக்காரன் மகன் கிட்டே போனானாம் வெக்கப்பட்டு செங்கமலம் சிரிச்சிக்கிட்டாளாம் உக்காந்தால் ஆள்மறையும் முந்திரிக் கொல்லே ஊருக்கெல்லாம் கோடியிலே முந்திரிக் கொல்லே. ---- ஞானக்கூத்தன் |
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
|
![]() |
![]() |
#9 |
|
குழந்தைகள் என்றால்...
குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம் குழந்தைக்கு அதைப் பற்றி என்ன? கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம் குழந்தைக்கு அதைப் பற்றி என்ன? அண்டத்திலேயே பெரிய சிம்மாசனம் கடவுளுடையதுதானாம் குழந்தைக்கு அதைப் பற்றி என்ன? கடவுள் அதிலேவந்து குந்தியிருகாதப்போ குழந்தைகள் அதிலே ஏறி உட்கார்ந்து நடிக்குமாம் கடவுளுக்கு அதைப் பற்றி என்ன? சமயங்களில் குழந்தைகள் அதிலே சிறுநீரும் பெய்துவிடுமாம் கடவுளுக்கு அதைப் பற்றி என்ன? -- தேவதேவன் |
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
பருந்து
உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் புழுக்களை கோழிக் குஞ்சுகளை அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை புலம்பல்களை போரை போர்க்களங்களில் பிணமாகி அழியும் மனிதர்களை பிணங்களின் அழுகிய வாழ்வை- நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா? அது தன் சிறகு மடித்து தனது பனித்த கண்களுடன் ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில் அய்யம் சிறிதுமின்றி ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா? -- தேவதேவன் |
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
![]() |
#13 |
|
எப்போது வருவாய்
நீ எப்போது வருவாய்? அந்தப் பெண் கண்களில் நீர் தளும்ப யாரிடமோ தொலைபேசியில் இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள் நான் கவனிப்பதைப் பற்றி கவலைப்பட அவளுக்கு எந்த அவகாசமும் இல்லை எப்போது வருவாய் என்பதைக் கேட்பதைத் தவிர அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து தெரிந்துகொள்ள எதுவும் இல்லை அவள் பிடிவாதமாக இருந்தாள் மன்றாடுதலுடன் இருந்தாள் தனிமையாக இருந்தாள் எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள் எத்தனை யுகங்களாய் இதே குரலில் இதே கண்ணீருடன் இதே கேள்வி கேட்கப்படும் என்று தெரியவில்லை வர வேண்டிய யாரோ ஒருவர் இன்னும் வராமலேயே இருந்துகொண்டிருக்கிறார் -- மனுஷ்ய புத்திரன் |
![]() |
![]() |
#14 |
|
|
![]() |
![]() |
#16 |
|
|
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
![]() |
#18 |
|
என் பெயர் - மருதாயி
- இன்குலாப் ஆன்ற தமிழ்ச் சான்றோரே! தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி கம்ப இராமாயணம் பொ¢யபுராணம் மறந்து விட்டேன் - திருக்குறள் எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான் தாய்மொழி - தமிழ் பெயர் - மருதாயி தொழில் - பரத்தை என்னைக் கடைமகள் எனலாம்.. மதுரையைக் கொளுத்திய கற்பரசியே - தலையாய கற்பினள் அல்லள்! உங்கள் மூத்த தமிழ் அளவுகோலில்.. கற்புத் தோன்றிய அன்றைக்கே நானும் தோன்றிவிட்டேன் ! அய்யா ஆன்ற தமிழ்ச் சான்றோரே! என்னிடம் முதலில் வந்தவன் உங்கள் கொள்ளுப் பாட்டன்.. இப்பொழுது வந்து போனவன் கொள்ளுப் பேரன்! என்றாலும் பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம் "பெய்யெனப் பெய்ய" தன் சடலம் எ¡¢யும் போது உடன்வேக.. பாட்டி ஒருபோதும் பாட்டனிடம் கேட்கவில்லை "பெய்யெனச் சொல்லுக உடன் வேக" இருக்கையில் சில சமயங்களிலும் போகையில் சில சமயங்களிலும் பாட்டி தன் தங்கையைத் தாரமாக்குவாள் இல்லாவிடினும் இவன் மேய்வான்.. பத்தினியைப் பறிகொடுத்த பாட்டனுக்கு மச்சினியைக் கைப்பிடித்த ஆறுதல்.. இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும் மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும் ஒரு கீறலும் இல்லை கற்பில்.. தமிழ்க் குடும்பம் புனிதமானது! தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க் கற்புடையது.! விரும்பியவனைச் சேர்வது கற்பாகாது. கட்டியவனை ஒப்புவதுதான் கற்பாகும்.. கட்டியவன் முகமன்றி வேறு முகம் கூடாது காண. கட்டியவன் நிழலன்றி வேறு நிழலில்லை பட. அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே! கற்பரசி நினையாவிடினும் கண்டவன் அவளை நினைத்தால் அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்.. கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்.. தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும் கற்புடையவைதாம். கைம்மை உய்யாக் காமர் மந்தி ஓங்குமலை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும். தன்கணவன்மீன் அல்லாத வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த மனைவிமீனை வெட்கம் பிடுங்கித் தின்னும்.. தற்கொலை செய்ததோ என்னவோ தண்ணீ¡¢ல்.. உடன் கட்டை ஏறிய பத்தினிப் பெண்ணைப் பாராட்டாத தமிழ் எழுத்தில்லை. பொ¢யார் எழுத்தைத் தவிர. பாவாடையும் சேலையுந்தான் தமிழ்ப் பண்பாடு.. சு¡¢தாரும் பேண்டும் கவர்ச்சிக் கண்றாவி! மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா? மொபட் ஓட்டாதே.. படைநடை பயிலாதே.. தமிழ்ப் பெண் அடக்கமானவள்.. ஆறடிக் கூந்தல் இன்னுமோர் அடையாளம். கூந்தல்வார நேரமில்லையா? மூக்கடைப்பு நோய்த் தொலலையா? கூந்தலைக் குறைக்காதே தமிழ் குறைந்து போய்விடும்! ஒருவனுக்கு உண்மையாய் இருப்பதே தமிழ்க் கற்பு.. அவன் கல்லானாலும் மண்ணானாலும் கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா என்று எதிர்பார்ப்பதே தமிழ் மரபு நியாயம்.. தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம். இங்கிலாந்து நடத்திய கன்னிமைச் சோதனையை இல்லறம் தொடங்குவோன்.. நடத்திப் பார்க்கலாம் தேறினால் மட்டுந்தான் பண்பாடு தேறும்.. தமிழ்க் குடும்பம் புனிதமானது.. அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே! உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த காலகாலமாய் நானும் நடக்கிறேன் கற்புத் தோன்றிய அன்றைக்கே நானும் தோன்றிவிட்டேன் - தாய்மொழி - தமிழ் பெயர் - மருதாயி தொழில் - பரத்தை ! |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|