|
![]() |
#1 |
|
ஷங்கரின் `பாய்ஸ்' படத்தில் நடித்த இளவட்டங்களில் பரத், சித்தார்த், ஜெனிலியா அடுத்து மணிகண்டன் லேட்டஸ்டாக நகுல் என எல்லோருமே சினிமாவில் ரவுண்ட் கட்ட, இதில் மிஸ்ஸானது டிரம்ஸ் கேரக்டரான அந்த கொழு கொழு பார்ட்டி சாய். இப்போது அந்த டிரம்ஸ் கேரக்டர் தமிழ் சினிமாவின் புது மியூஸிக் டைரக்டர் தமன்!
இவர் சாய் என்ற தன் பெயரையும் தமன் என்று மாற்றிக் கொண்டு `சிந்தனை செய்' படத்தின் மூலம் களத்தில் இறங்கியிருக்கிறார். இனி தமனின் பேட்டி. உங்களோடு நடிச்ச ஐந்து பேரும் சினிமாவுல முன்னணிக்கு வந்துவிட, இந்த ஐந்து வருடங்களாக உங்களை மட்டும் எங்கேயும் பார்க்க முடியலையே. என்னாச்சு? ``எங்க குடும்பமே ஒரு இசைக் குடும்பம். அப்பா சிவகுமார் டிரம்ஸ் நல்லா வாசிப்பார். அம்மா சாவித்திரி கச்சேரிகள்ல நிறைய பாடினவங்க. `காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து...'னு பிரபலமான பாடலைப் பாடியது என்னோட அம்மாதான். இதனால சின்ன வயசிலிருந்தே பெரிய இசையமைப்பாளராக வரணுங்கிறதுதான் என்னோட லட்சியமாக இருந்துச்சு. ஒரு டிரம்மராகத்தான் சினிமாவுக்குள்ளே நுழைஞ்சேன். அப்பதான் `பாய்ஸ்' படத்துக்கு புரொஃபஷனல் டிரம்மர் வேணும்னு என் நண்பரான ஷங்கரோட அக்கா பையன் பப்பு சொன்னதால நடிக்க வந்தேன். அப்புறம் அஞ்சு வருஷம் இசையில நிறைய கத்துகிட்டேன். ராஜ் கோட்டி சார், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், மணிஷர்மா, கீரவாணி, தேவி ஸ்ரீ பிரசாத், தீனா என எல்லா பெரிய இசையமைப்பாளர்கள்கிட்ட டிரம்மராக, கீ-போர்ட் ப்ளேயராக இருந்து நிறைய கத்துகிட்டேன். என் சொந்த முயற்சியில் `தால்' என்ற பெயர்ல ஸ்டூடியோ கட்டிட்டேன். இப்ப ஓரளவுக்கு மெச்சூர்டாக உணர்ந்ததும் என்னோட லட்சியமான மியூஸிக் கம்போஸிங்குக்கு வந்திட்டேன். என்னோட இசையில `சிந்தனை செய்' படம் முதலில் வெளிவருது. அடுத்ததாக ரவிவர்மனின் `மாஸ்கோவின் காவிரி', `அரிது அரிது', அடுத்ததாக ஷங்கர் தயாரிப்பிலான `ஈரம்' படம் உருவாகிட்டு இருக்கு.'' சினிமா பேக்ரவுண்ட் இருந்ததால ஈஸியா இசையமைக்க வந்துட்டீங்களா? ``எங்கப்பா எனக்கு பதிமூணு வயசாகும் போதே 1995-ல் தவறிப் போயிட்டாங்க. எங்க குடும்பமே அதிர்ச்சியில உறைஞ்சு போச்சு. தனிப்பெண்ணாக எங்கம்மா குடும்பத்தைக் காப்பாத்த பட்ட கஷ்டம் கொஞ்சமில்ல. அதனால எட்டாவது படிக்கும்போதே குடும்பத்துக்காக படிப்பை உதறிட்டு எனக்குத் தெரிஞ்ச டிரம்ஸ் வாசிக்க கிளம்பிட்டேன். சுமார் மூவாயிரம் கச்சேரிகள்ல `சாதகப் பறவைகள்' குழு மூலம் டிரம்ஸ்வாசிச்சிருக்கேன். என்னோட வொர்க்கைப் பார்த்து கங்கை அமரனோட ட்ரூப் இன்சார்ஜ் அஜீபால், கங்கை அமரன்கிட்ட சேர்த்துவிட்டார். அப்பதான் வெங்கட்பிரபு, எஸ்.பி.பி.சரண், ப்ரேம்ஜி, யுகேந்திரன், விஜய் யேசுதாஸ், தேவன் இவங்க சேர்ந்து `ஜெனரேஷன்' என்ற ட்ரூப்பை நடத்தினாங்க. இவங்களோடு டிரம்மராக உலகத்தைச் சுத்தினேன். இப்படி கஷ்டப்பட்டு உழைச்சுதான் `தால்' ஸ்டூடியோவை சொந்தமா கட்டினேன்.'' `பாய்ஸ்' படத்துல உங்ககூட நடிச்ச மற்றவங்களோடு உங்களுக்கு இன்னும் நட்பு தொடர்கிறதா? ``மணிகண்டனும் நானும் அடிக்கடி சந்திப்போம், பரத், சித்தார்த், நகுல் இவங்களை ஏதாவது ஃபங்ஷன்களில் பார்த்துப் பேசுறது உண்டு. ஜெனிலியாகூடதான் பேசவே முடியாம போச்சு. இப்போ ராகுல், ரஞ்சித், ஆலஸ், மேகா, திவ்யா இவங்கதான் என்னோட கேங். க்ளோஸ்ஃப்ரெண்ட்ஸ்.'' அப்புறம் உங்களைப் பத்தி கொஞ்சம் பர்ஸனல்..? ``எனக்கு கல்யாணமாகி ஒரு குட்டிப் பையன் இருக்கார். அர்ஜித் அவரோட பெயர். மனைவி ஸ்ரீவர்த்தினி. `பஞ்சாங்கம் பார்க்காதே மாமா', `கண்ணாலே மெய்யா' பாடல்களைப் பாடியது இவங்கதான். உடனே லவ் மேரேஜ்ஜின்னு நினைக்காதீங்க. அரேன்ஜ்டு மேரேஜ்தான். அம்மாவும் மனைவியும் கொஞ்சம் ஷைடைப். அதான் நீங்க கேட்டும் போட்டோ வேண்டாம்னு சொல்லிட்டாங்க'' பலமாகச் சிரிக்கிறார் தமன்.. 3.12.o8 kumudham |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|