Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.
![]() ![]() ![]() திரியின் தலைப்பு : தற்க்கால தமிழ் இலக்கியம் கேள்வி: தற்க்கால தமிழ் இலக்கிய போக்கு எப்படி உள்ளது ? பதில்கள்: வள்ர்ச்சியடைந்துள்ளது ஒன்றும் புரியவில்லை வீழ்ச்சியடைந்துள்ளது |
![]() |
![]() |
#3 |
|
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது. ![]() To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support. |
![]() |
![]() |
#4 |
|
தரமான தனி நாவல்கள், கதைகள், கட்டுரைகள்,காரசாரமான விவாதங்கள், சுவையான அலசல்கள், பட்டிமன்றங்கள் இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் இணையதளங்களும் அருமையாக, ஆரோக்கியமாக பெருகியுள்ளன. மொழியின் புது பரிமானங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் வெகுஜன சஞ்சிகைகளின் சில கவர்ச்சியான வார்த்தை பிரயோகங்கள் அழகாயில்லை- என் கருத்தில், நாகரிகத்தின் எல்லைகள் மீறப்படுவதால். திரைப்பட பாடல்கள் இலக்கியமா என்று சந்தெகம் இன்றைய காலகட்டத்தில் எழும்புகிறது-வியக்கத்தக்க கற்பனைகளும், அருவருப்பான,அபத்தமான குப்பைகளும் கலந்து கிடக்கின்றன அவற்றிலே-இவ்வளவு ஆங்கில கலப்பும் அவசியமா என்றும் தோன்றுகிறது.சிறுபிள்ளைதனமாக, கோணங்கிதனமாக எழுத்தப்படுவதெல்லாம், மேடையில் முழங்கப்படுவதெல்லாம் கூட இலக்கியமாக சித்தரிக்கப்படும் அவலமும் காணப்படுகிறது. உமியை பிரித்து ஊதிவிட்டு அவலை மெல்ல வேண்டியுள்ளது.
|
![]() |
![]() |
#5 |
|
![]() To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support. Thanks for the support ![]() Otru pizhai and spelling are truly a matter of concern. But people like me who didnt have formal Schooling In Tamil (Studied Hindi & English in KV) should be excused, if any mistakes are found ![]() |
![]() |
![]() |
#6 |
|
ஆங்கிலக்கலப்புக்கு இவ்வளவு கவலைப்படுகிறீர்களே, அதற்கும் வடமொழிக்கலப்புக்கும் அப்படியென்ன வேற்றுமை?
எடுத்துக்காட்டாக, இலக்கியம் என்பதே வடமொழிச்சொல் தான் என்பதாக ரா.பி.சேதுப்பிள்ளை எழுதி இருக்கிறார் ![]() |
![]() |
![]() |
#7 |
|
வடமொழி கலப்பு சதவீதத்தைவிட ஆங்கில கலப்பு அதிக சதவீதம் ஆவது போல் தோன்றுவதே கவலைக்கான காரணம்! தமிழ் எழுத படிக்க தெரியாதோர் தொகை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தமிழ் என்று அறியப்படும் மொழியில் பாதி அளவாவது தமிழாய் இருக்க வேண்டுமே என்பது என் ஆதங்கம். போலி நாகரிக உணர்வால் ஆங்கில கலப்படம் செய்வதை கண்டிக்காமல் இருக்கமுடியவில்லை!
|
![]() |
![]() |
#8 |
|
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது. தமிழ் இலக்கியம்.. என்பது என்றைக்கும் இலக்கியம் தான். இதில் பழையது என்ன?... புதியது என்ன.? சந்திரனில் பழைய சந்திரன், புதிய சந்திரன்.. என்று ஏதாவது சிந்தனை உள்ளதா.? என்றைக்கும் புதுமை தானே.? முருகன் என்றும் புதியவன் என்று ஔவை கூறினாளே... அது போல. அதே போல... ஐம்பெரும் காப்பியங்கள், கம்ப-ராமாயணம், வில்லி பாரதம், நள-வெண்பா போன்ற தரமான உயர் தமிழ் இலக்கியங்கள் யாவுமே... ...என்றைக்கும் அன்றலர்ந்த தாமரை போன்றவையே இவ்வாறு நான் சொல்வதால்... தற்கால இலக்கியத்தை பழிப்பதாக பொருள் செய்யலாகாது. தற்கால இலக்கியம் பற்றி சொல்ல வேண்டியவை ஏதேனும் இருந்தால்... தாராளமாக கூறலாமே. அதை விடுத்து... பழையது புதியது என்று பாகம் பிரித்து எல்லைக்கோடு போடுவது ஏனோ.? . |
![]() |
![]() |
#9 |
|
|
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது. இன்னோரு காரணம் ஒரு வித அபாயச்சுழல்: பரிச்சயமின்மை. அநேகம் பேருக்கு - என்னையும் சேர்த்தே சொல்கிறேன் - பாரதியோடு வாசிப்பு நின்றிருக்கலாம். அதையும் தாண்டி ஒன்றிரண்டு வாசித்திருந்தாலும் விவாதிக்கும் அளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அதனாலேயே இது அதிகம் பேசப்பட, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். நீங்களே துவங்குங்களேன். சமீபத்தில் வெளிவந்ததில், நீங்கள் விரும்பிப் படித்த நாவல் பற்றி எழுதுங்களேன். |
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#15 |
|
|
![]() |
![]() |
#16 |
|
.
தட மாற்றத்துக்கு மன்னிக்கவும் என் கேள்வி ஒன்றே ஒன்று தான். இந்த இழையின் தலைப்பு என்ன? நீங்கள் விவாதிப்பது என்ன.? ஏதாவது தொடர்பு உள்ளதா.? துவக்க தேர்தல்- பட்டியும் தமிழின் தற்கால இலக்கிய- தரம் பற்றியே கேள்வி கேட்கிறது.! இது நமக்கு தேவையற்ற குழப்பம் அல்லவோ.? நீங்கள் எல்லோரும் எதை பற்றி வேண்டுமானாலும் உரையாடுங்கள். உங்கள் விருப்பம் போல... வரவேற்கிறேன். அதாவது... தலைப்பிற்கு ஏற்றபடி... தற்கால தமிழ் இலக்கியம் பற்றி... ..நீங்கள் எவருமோ அல்லது மற்றவர்களோ ஏதாவது கூற வேண்டியிருந்தால் கூறுங்கள்... இங்கே. மாறாக தற்போது மாறியுள்ள திசையானால்... ...இதோ ஏற்கனவே அந்த இழை இருக்கிறது... அங்கே உங்கள் கருத்துக்களை அந்த இழை சம்பந்தப்பட்ட வகையிலே... கூறுங்கள். ஆனால் "கிளி" என்று தலைப்பிட்டு "மயிலை" காட்டாதீர். . கிளியா.? மயிலா.? . |
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
![]() |
#18 |
|
சுஜாதாவில் 'கடவுள்' கட்டுரைத் தொகுப்பு.
'கடவுள்' என்ற கான்செப்டை (இதற்கு தமிழ்சொல் என்ன ?) வரலாறு,மதம், இலக்கியம், இயற்பியல் என்ற பல கோணங்களில் இருந்து அலசி எழுதப்பட்ட கட்டுரைகள். 80-90 களில் (சுஜாதாவின் பொற்காலம் ?) பல பத்திரிக்கைகளில் எழுதியவற்றின் தொகுப்பு. புரிவதற்கு கடினமானவற்றைக் கூட அணுகமுடியுமாறு எழுதப்பட்ட கட்டுர்ரைகள். வெவ்வேறு தொடர்களின் தொகுப்பு என்பது நன்றாகத் தெரிவது ஒரு குறை (திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட தகவல்கள், பாசுரங்கள்). அப்பித்திரிக்கையின் சராசரி வாசகன் யார் என்பதை வைத்துக்கொண்டு எழுதுப்பட்டிருக்கிறது. சிலவற்றில் வெறும் தகவற்குவியல், சிலவற்றில் வியப்பான கேள்விகள், சற்று ஆழமான ஆராய்ச்சி, வாசகன் மீது எப்போதும் ஒரு கண்: இதற்கு மேல் எழுதினால் மூடிவைத்துவிட்டு பெப்ஸி உங்கள் சாய்ஸ் பார்க்க சென்றுவிடுவீர்கள் ![]() அதிகம் தலைமுடி உள்ளவர்கள் இக்கேள்வி பற்றி மேலும் யோசிக்கலாம் ![]() கடினமானவற்றை விளக்கும்போதுகூட குன்றாத மொழிச்சரளத்துக்காகவே இதைப் படிக்கலாம். |
![]() |
![]() |
#19 |
|
தமிழில் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருப்பினும் நான் வாசிப்பது பெரும் பாலும் வரலாறு ,அரசியல் ,சமூகம் சார்ந்த கட்டுரைகள் தான் . நாவல்கள் வாசிக்கும் பழக்கம் அதிகம் இல்லை ..அதையும் மீறி சில நாவல்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன.
கடைசியாக என்னை கவர்ந்த நாவல் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்று தமிழக அரசின் பரிசைப் பெற்ற திரு .ஜோ டி குரூஸ் எழுதிய 'ஆழி சூழ் உலகு' என்ற நாவல். தென் தமிழகத்தின் பரதவ (மீனவ) இன மக்களின் வாழ்க்கை பின்புலத்தை வைத்து அந்த இனத்திலேயே பிறந்த ஒருவரால் எழுதப்பட்ட நாவல். அதைப்பற்றிய என் நூல் அறிமுகத்தை இங்கு காணலாம். http://cdjm.blogspot.com/2006/02/blog-post_22.html குறிப்பு : சிங்கையில் இருப்பவர்களுக்கு ,இந்த நூல் மத்திய நூலகத்தில் கடனுக்கு கிடைக்கும் |
![]() |
![]() |
#20 |
|
அறிமுகத்துக்கு நன்றி ஜோ.
உங்கள் ப்ளாகில் பலர் சொன்னது போல, இந்த உலகத்தைப் பற்றிய வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" முக்கியமான நாவலாகக் கருதப்படும் ஒன்று. அந்த வண்ணநிலவன் தான் துக்ளக்'கில் துர்வாசர் என்ற பெயரில் எழுதுபவர் என்று நம்புவது மிக மிக கஷ்டம் ! அந்நாவலில் உங்கள் வட்டார வழக்கு அதிகம் இருந்ததாக ஞாபகம் இல்லை. சிரமப்படாமல் வாசித்ததாக ஞாபகம் :P புத்தம் வீடு என்றொரு நாவல் - எழுத்தாளர்: ஹெப்சிபா ஜேசுதாசன். அதில் (கிட்டத்தட்ட) இந்த பேச்சுவழக்கு வரும். இதுவரை அதைப் படித்ததில்லையென்றால், நிச்சயம் அதை பரிந்துரைப்பேன். (ஜெயமோகனின்) ஓரிறு சிறுகதைகள் தவிற அந்தத் தமிழை படித்து - ஏன் கேட்டுக் கூட- பழக்கமில்லை. படிக்க கொஞ்சம் திணரியிருக்கிறேன். திரைப்படங்களில் கூட இது அதிகமாகப் பதிவாகவில்லை என்று நினைக்கிறேன் (சரியா?). சொல்லப்ப் மதுரைக்குத் தெற்கே யாரும் வந்ததில்லை - டும் டும் டும் அழகம்பெருமாள் தவிற ? இந்த நாவலில் இம்மக்களில் கூட்டு வாழ்க்கையின் எழுதப்படாத சட்டங்கள் ,மதம் சார்ந்த மதிப்பீடுகள் ,வீரமும் வீம்பும் நிறைந்த செயல்பாடுகள்,திட்டமிடப்படாத எகத்தாளமான பொருளாதார வாழ்க்கை,அலைகளோடு அன்றாடம் அவர்கள் நடத்தும் போராட்டம் ,மதத்தோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை,கத்தோலிக்க குருமார்களின் சமுதாயப் பங்கு ,பிரத்தியேகமான மொழிக்கூறுகள் ,தனிமனித உறவுகள்,இலங்கையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு,அண்டைய நாடார் சமூகத்தோடு உள்ள உறவு இப்படி பல கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அறிமுகத்துக்கு நன்றி. உங்கள் நாவல் படிக்கும் உந்துதல் இன்னும் பெருகுமாக ! |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|