LOGO
Reply to Thread New Thread
Old 06-02-2012, 03:04 AM   #1
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default Upanayanam
நேற்று ஒரு உபநயனத்துக்குப் போனேன். மேடை மேல் உபநயனப் பையன் மாலை அணிந்து கொண்டு நான்கு புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருக்கும் செயின் போட்டோவில் விழவேண்டுமே என்ற கவலையில் அவனுடைய தாய் அடிக்கடி குனிந்து அதை எடுத்து மாலை மேல் நெளிய விட்டுக் கொண்டிருநதாள். ஸாஸ்திரிகள் புத்தகத்தைப் பார்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். வீடியோக்காரர் அவருக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்தார். வேத மந்திரங்கள் மகா புனிதமானவை, அதைக் காதால் கேட்டாலே புண்ணியம். அதை வாயால் வேறு சொல்வானேன் என்ற எண்ணத்தில் பையனின் தகப்பனார் மந்திரத்தைச் சொல்லாமல் வாசல் பக்கம் பார்ப்பதும் வருவோர்களைக் கை கூப்பி வரவேற்பதுமாக இருந்தார். அவரது ஓவர்சைஸ் தொப்பையும் பஞ்சகச்சமும் பொருந்தாத் திருமணம் புரிந்த தம்பதிகள் போல போராடிக் கொண்டிருந்தன. வேட்டி விவாக ரத்து செய்துவிடப் போகிறதே என்ற பயத்தில் அவர் அடிக்கடி அதைக் கையால் பிடித்தபடி இருந்தார். வடுவிற்கு பசிக்கப் போகிறதே என்ற கரிசனத்தோடு அத்தைகளும் சித்திகளும் அவனுக்கு அடிக்கடி பால், ஜூஸ் முதலானவற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

என் அருகில் பேண்ட் டீ ஷர்ட் அணிந்த மீசை வைத்த மூத்த குடிமகன் ஒருவர் இருந்தார். (அமெரிக்க) நாடாறு மாதம், (இந்தியக்) காடாறு மாதம் வாழ்பவர் என்று அவர் நெற்றியில் ஒட்டியிருந்தது. அவர் முன் வரிசையில் பிட்ஸ் பிலானி என்று அச்சிட்ட டீ ஷர்ட் அணிந்திருந்த ஒரு பையனிடம் ஸாஸ்திரிகள் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்களுக்கு அவ்வப்போது ரன்னிங் காமெண்ட்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு தடவை என் பக்கம் திரும்பி இதை எல்லாம் நாம தான் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லணும். ஒண்ணுமே தெரியாமல் வளர்றதுகள் என்று சொன்னார்.
ஆசீர்வதிக்க வந்த மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு குழுவின் பேச்சு பலமாக ஒலித்ததால் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் காதில் விழுந்தது.

* * * * * * * *
ஏன் மாமி, இந்தப் புடவை பிரசாந்தியா? அதில் தான் நிறைய வெரைட்டி வருகிறது. நன்றாக இருக்கிறது.

* * * * * * * *
எதுக்கு மாமா கல் மேலே நிக்கறான்?
கல்லைப் போல உறுதியா இருக்கணும்னு உபதேசம் பண்றார் குரு, அதாவது அவன் அப்பா. குழந்தாய், இந்தக் கல் மீது நில். அதைப் போல் அசையாமல் இருந்து உன் எதிரிகளை வெற்றி கொள் அப்படின்னு அர்த்தம் இப்போ சொல்ற மந்திரத்துக்கு.

* * * * * * * *
சென்னை சூபர் கிங்க்ஸ் இந்தத் தடவை ஜெயிக்காதுன்னு முன்னாடியே தெரிஞ்சு போச்சு.

* * * * * * * *
எதுக்கு மாமா கயறு கட்டறா? கயறு இல்லேடா. அதுக்குப் பேரு மௌஞ்ஜி. முஞ்ஜிங்கிற புல்லினால் செய்யணும். இப்போ தர்ப்பையாலே முறுக்கிப் பண்றா. இந்த மௌஞ்ஜி வீட்டைத் தூய்மைப்படுத்துகிறது. பிராண அபானங்களுக்கு பலம் தருகிறது. ஸத்யத்தைக் காப்பது. பகைவரைக் கொல்வது. இதனால் நாம் நலம் பெறுவோம்னு அந்த மந்திரத்துக்கு அர்த்தம்.

* * * * * * * *
வாண்டுகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. சுரிதார்கள் ஒரு ஓரமாக நின்று கிளுகிளுத்தன. ஒரு எட்டு வயதுப் பட்டுப் பாவாடை மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தது. குடித்துவிட்டு எல்லோரும் பிளாஸ்டிக் கப்புகளை நாற்காலியின் கீழ் போட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர்.

* * * * * * * *
தக்ஷிணை எவ்வளவு?
இருபதாயிரம்.
அடேயப்பா. இருந்தாலும் இந்த வைதீகாளுக்கு இவ்வளவு பேராசை ஆகாது.
இதெல்லாம் டிமாண்ட் அண்ட சப்ளையை பொறுத்த விஷயம் ஸ்வாமி. நல்ல வைதீகா கிடைக்கிறதில்லே. அதனாலே தான் இந்த டிமாண்ட்.
இருந்தாலும் வேதத்தை அத்தியயனம் செய்துவிட்டு தர்மத்துக்கு வழி காட்ட வேண்டியவா இப்படி அக்கிரமம் பண்ணினா ஜனங்களுக்கு வைதீக சிரத்தையே போயிடும் ஸ்வாமி.

* * * * * * * *
குருவே, நான் வேதம் பயிலத் தகுதி அடைந்து விட்டேன். என்னை அருகே அழைத்துக் கொள்ளும்னு பையன் சொல்றதாக அர்த்தம்

* * * * * * * *
காலம்பர டிபன் நன்னா இருந்தது. யார் கேட்டரிங்
அடுத்த தெருவிலே தான் இருக்கார். அவா கிட்ட எப்பவுமே சாப்பாடு ஐட்டம் டேஸ்ட்டாகத் தான் இருக்கும். ரேட்டும் மாடரேட்டா இருக்கும்.
ஜனவரிலே பொண்ணு கல்யாணம் வெச்சிருக்கேன். இவாளையே சொல்லிடலாம்னு பார்க்கறேன். மத்தியான்னம் லஞ்ச்சையும் சாப்பிட்டுப் பார்த்துட்டுத் தான் சொல்லணும்.

* * * * * * * *
வேதம் காயத்திரி, பரப்ரும்ம்ம் இவ்றில் எதை நாடுகிறாய் அப்படின்னு குரு கேட்கிறார். பரப்ரும்மமே எனது லட்சியம், மற்றவை சாதனம்னு பையன் சொல்றான். இவா ரெண்டு பேருமே வாயைத் திறக்கல்லே. ஸாஸ்திரிகள் தான் கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லிண்டிருக்கார்.

* * * * * * * *
மேடையில் ஒரு ஸாஸ்திரிகள் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கோண்ணா. வேன்காரனே கீத்து, கழி, சட்டி, நெய் ஜாடா சாமானும் கொண்டு வந்துடுவான். நான் இன்னும் அரை மணிலே வரேன்.

* * * * * * * *
இந்த்த் தடவை புதுக்கோட்டைலே ஏடிஎம்கே தான்.
சொல்லமுடியாது. ஆன்டி- இன்கம்பன்சி பாக்டர் தான் கடுமையா இருக்குன்னு ஒரு பேப்பர்லே எழுதியிருக்கான்.

* * * * * * * *
எதுக்கு மாமா மரக்கிளையைக் கையிலே வெச்சிண்டிருக்கான்?
பொரச மரம்னு ஒரு மரம். அதோட கிளை இது. பலாச தண்டம்னு ஸம்ஸ்கிருதத்திலே சொல்லுவா. பலாச தண்டமே, நீ எப்படி தேவர்களது நிதியைக் காக்கிறாயோ அப்படியே நான் பிராமண நிதியான வேதத்தைக் காக்கணும்னு பையன் சொல்லணும்.

* * * * * * * *
நாளைக்கு நீர் ப்ரீயா?
நான் நாளைக்கு துரோந்தோவிலே டெல்லி போறேன். உபாத்தியாயக்காரா ஆத்திலே கல்யாணம். வர நாலு நாளாகும்
லகாரத்தோட திரும்பி வருவீர்?
அப்படிப்பட்ட எடம் இல்லே. கொடுத்ததை வாங்கிக்க வேண்டியது தான்.
நாலு நாளைக்கு ஊரை விட்டுப் போறதுன்னா தக்ஷிணை கணிசமா இல்லாட்டா நீர் போமாட்டீரே. சிஷ்யனை அனுப்பிப் பண்ணி வைக்கச் சொல்லிடுவீரே. எனக்குத் தெரியாதா?

* * * * * * * *
பாடம்னு சொல்லு, பாடம்னு சொல்லுங்கிறாரே ஸாஸ்திரிகள். எதுக்கு மாமா?
குரு சொல்றதுக்கெல்லாம் சரி சரின்னு பையன் சொல்லணும்.
.நீ பிரம்மசரிய ஆசிரமத்தை அடைஞ்சுட்டாய்.
நான் சொன்ன பிறகே உணவு சாப்பிடணும். ஆனா தண்ணீர் மட்டும கேட்காமல் பருகலாம்
.பணிவிடைகளைச் செய்
பகலில் தூங்காதே
பிட்சை எடு.
ஆசிரியருக்கு அடங்கி இரு
இப்படி ஒவ்வொண்ணா குரு சொல்லச் சொல்ல பையன் சரி சரின்னு சொல்றதாக அர்த்தம்.

* * * * * * * *
இது தான் கடைசி மந்திரம். பையனுக்கு சந்தியாவநதனம் செய்யறதிலே சிரத்தை உண்டாகணுங்கிறதுக்காக சொல்றது. சௌபாக்யம் உண்டாக்கும் சிரத்தா தேவியே, உலகில் இன்பம் தேடும் அனைவருக்கும் இன்பம் தருக. உன்னை நான் மூன்று வேளைகளிலும் அழைக்கிறேன். எனக்கு சிரத்தை உண்டாகும்படி செய். இந்த மந்திரத்தையாவது பையனை ஒழுங்கா சொல்ல வெச்சு அர்த்தம் சொல்லி இருக்கலாம். ஸாஸ்திரிகளுக்கே அர்த்தம் தெரியுமோ தெரியாதோ!

* * * * * * * *

ஒரு பிளாஸ்டிக் வாளி நிறைய அரிசி வைக்கப்பட்டிருந்தது. பையன் வெள்ளித் தட்டைக் கையில் ஏந்தியபடி, அம்மணி, பிச்சை போடுங்கள் என்று பரிதாபமாக வேண்டிக் கொண்டிருந்தான். வித்யார்த்திகளுக்கு உதவ வேண்டும் என்ற பாரம்பரியம் தவறாத பட்டுப் புடவை மாமிகள் க்யூ வரிசையில் நின்று அந்த ஏழை மாணவனின் பசி தீர்ப்பதற்காக வெள்ளிக் கிண்ணத்தால் அரிசி மொண்டு மிகுந்த பரிவுடனும் சிரத்தையுடனும் தட்டில் போட்டனர். கூடவே ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயங்களையும் போட்டனர். அரிசியையும் காசையும் அவன் வேறு ஒரு வாளியில் கொட்டிக் கொண்டிருந்தான்.

அவன் எல்லா அரிசியையும் காசையும் தின்று அஜீரணத்துக்கு உள்ளாகிவிடப் போகிறானே என்ற கவலையால் ஸாஸ்திரிகள் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டி வைத்தார்.

தன் சிஷ்யனைக் கூப்பிட்டு டேய் இதை எடுத்துக்கோடா என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்த தேங்காய்களைத் தன் பையில் போடத் தொடங்கினார். அவர் கிளம்புவதைக் கண்ட பையனின் தகப்பனார், ஸாஸ்திரிகளே, மாத்தியான்னிகம் பண்ணி வைக்கணுமே என்று பவ்யமாகக் கேட்டார்.

எனக்கு நேரமாகி விட்டது. இன்னிக்கு ஏகப்பட்ட வேலை. உமக்காக வந்தேன். நீங்களே மாத்தியான்னிகம் பண்ணி வெச்சுருங்கோ. நான் வரேன்.

பையனின் தகப்பனார் எழுந்து பஞ்சகச்சம் விழாமல் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்து ஒவ்வொருவரிடமும் மாத்தியான்னிகம் பண்ணி வெக்கறேளா என்று வேண்டிக் கொண்டிருந்தார். ஒருவரும் சம்மதிக்கவில்லை. என் பக்கத்தில் இருந்த அரை அமெரிக்கரிடம் கேட்டபோது அவர் நான் பேண்ட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். மந்திரம் சொல்லணும்னா அதுக்குள்ள வேஷத்தோட இருக்கணும் என்று சொல்லி மறுத்து விட்டார்.

என்னிடம் வந்தார். நீங்கள் சந்தியா வந்தனம் செய்வதில்லை. உங்கள் பையனும் செய்யப் போவதில்லை. நாளை முதல் நிறுத்துவதை இன்றைக்கே நிறுத்தி விடலாம் என்று சொல்ல நினைத்தேன். அதைத் தான் சொல்வானேன் வாய் தான் நோவானேன் என்று நினைத்து மௌனமாகத் தலையாட்டி மறுத்தேன்.

பையனின் குடும்பத்தாரின் பிராமண அப்பிராமண உறவினர்களும் நண்பர்களும் கியூ வரிசையில் சென்று ஒவ்வொருவராகக் கவரைக் கொடுத்துப் போட்டோ பிடித்துக் கொண்டார்கள். போட்டோ செஷன் ஒரு மணி நேரம் நடந்தது.

பையனுக்கு வேத அத்தியயனம் செய்யத் தகுதி வந்து விட்டது. வரும் ஆவணி அவிட்டத்து அன்று அவன் வியாச ஹோமம் செய்து வேதத்தைக் கற்கத் தொடங்கி விடுவான் என்ற நம்பிக்கையுடனும், தன் மேல் சுமத்தப்பட்ட வேத ரக்ஷணம் என்ற மிகப் பெரிய பொறுப்பைப் பிராமண சமூகம் இன்று வரை நிறைவேற்றிவிட்டது என்ற திருப்தியுடனும் எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கலைந்தனர்.

இப்படியாக உபநயனம் சிறப்பாக நடந்தேறியது
radikal is offline


Old 06-02-2012, 03:00 PM   #2
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
hi vikrama sir,
this is present day reality....my son had upanayanam...samasthi upanayanam in chennai...same scene/customary actions
everywhere....sometimes i feel myself....this may be better than those who never try to do upanayanam....nowdays upanayanam conducting
before wedding day.....i dont know the real situation....traditional with modern outlook...i had my upanayanam in a small village
with tradtional outlook....same thing not happened for my son.....may be very different for my grandson....ellam kalathin kolangal...
MannoFr is offline


Old 06-02-2012, 03:59 PM   #3
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
Sri. ikrama, Greetings.

நீங்கள் சந்தியா வந்தனம் செய்வதில்லை. உங்கள் பையனும் செய்யப் போவதில்லை. நாளை முதல் நிறுத்துவதை இன்றைக்கே நிறுத்தி விடலாம் என்று சொல்ல நினைத்தேன். Good one! I like that. ( Not that I am supporting discontinuing sandhya vandhanam. That is personal choice. I just liked the reality in what Sri. Vikrama wrote).

Cheers!
Peptobismol is offline


Old 06-02-2012, 05:08 PM   #4
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
நேற்று ஒரு உபநயனத்துக்குப் போனேன். மேடை மேல் உபநயனப் பையன் மாலை அணிந்து கொண்டு நான்கு புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.................. இப்படியாக உபநயனம் சிறப்பாக நடந்தேறியது
நண்பரே! நல்ல தமிழ் கண்டு மகிழ்ச்சி! அதிலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததில், இரட்டிப்பு மகிழ்ச்சி! (மகிழ்ச்சிகள் உண்டா என்ன?)

நான் தட்டெழுதிய சில வரிகள் நினைவுக்கு வருகின்றன. இதோ அவை:

ஒரு கல்யாணக் காட்சி!

இதனிடையில் ஒரு நாள் மகனின் நண்பனின் திருமணம்;
பட்டுடையில் சென்ற நான் கண்டது “சென்னைத் திருமணம்”!

“சாப்பிடவா!” என்றழைக்க ஒரு ஜீவனும் அங்கில்லை!
கூப்பிடமாட்டார் என அறிந்து சிற்றுண்டி எம் வீட்டிலே! – மாப்பிள்ளையின்

அக்காவிடம் நான் சென்று “அவன் அம்மாவா” எனக் கேட்க,
அக்கா என்னை முறைக்க, நான் பிழைக்க எடுத்தேன் ஓட்டம்!

__________________________________________________ ________

உறவுகள் நீடிக்குமா?

காலம் மாறுகிறது! பொருட்களின் மதிப்பும் மாய்கிறது!
காலம் காலமாய்த் தொடர வேண்டிய உறவு தேய்கிறது!

லட்சங்களில் செலவு செய்து முடித்த திருமணங்கள் – நல்ல
லட்சியங்கள் இல்லாததால் ஆட்டம் கண்டு போகிறது!

இன்றைய இளைஞர் பலர் மனம் மாறுவதேன்? துணையுடன்
அன்றைய காலம் போல இறுதிவரை பயணிக்காததேன்?

ஏழு அடிகள் வைக்கும்போது வாழ்க்கைத்துணையாளுக்கு
ஏழு உறுதி மொழிகள் தந்து, அவற்றை மதிக்காததேன்?

சுற்றம், நட்புக்குப் பரிசளித்து வேண்டி விரும்பி அழைப்பதும்,
சுற்றம், நட்பும் கூடி மகிழ்ந்து விருந்து உண்ண அலைவதும்,

திருப்பதி தரிசனம் போல வரவேற்பில் கால்கள் கடுக்க நிற்பதும்,
திருப்தி தராத தமக்கு வந்த பரிசுகளை அங்கே தள்ளிவிடுவதும்,

பிணக்கின்றிப் புதுத் தம்பதியர் செயற்கைப் புன்னகையுடன்
தனக்கு வரும் பரிசுகளை எண்ணி, எண்ணித் திளைப்பதும்,

மேளம் கொட்ட, புரியாத மொழியில் மந்திரம் சொல்லி, நல்ல
நேரம் பார்த்து, பூமாரி பொழிய, பளபளக்கும் தாலி கட்டுவதும்,

‘மாப்பிளை வந்தாரா? நாட்டுப் பெண் வந்தாளா?’, எனக் குழைவதும்,
மாப்பிள்ளை வீட்டாரைத் தலைமேல் தாங்க மற்றோர் விழைவதும்,

பக்ஷணப் பெட்டிகளை அள்ளி அள்ளி வழங்குவதும், எந்த
லக்ஷணம் இல்லாதவரையும் அழகெனப் புகழ்வதும் – என

இந்த எதிலுமே குறைவின்றிக் கல்யாணங்கள் அரங்கேறும்;
எந்த வாழ்வு தொடர வேண்டுமோ அது கேள்விக் குறியாகும்!

“சீரியல்” மாமியார்கள் போலச் சிலர் செய்யும் கொடுமையினால்,
“ஏரியல்” இல்லாத வானொலிப் பெட்டிபோல வாழ்வு கரகரக்கும்!

கணக்குக் கேட்டு, என் பணம், உன் பணம் எனப் பிரித்து, வாழ்வின்
கணக்கை முடிக்க நினைக்கும் எத்தனை ஜோடிகள் சேர்கின்றன!

விட்டுக் கொடுத்து வாழும் நெறி முறைகள் தேய்ந்து, இன்று
தட்டிக் கேட்க ஆளில்லாது நம் நல்ல சமுதாயமே சீரழிகிறது!

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழியில் வரும்
பழகும் காலம், வெறும் பத்து நாளாய்க் கூட இருக்கிறது!

நஷ்டம் ஒருவருக்கானால் லாபம் இன்னொருவருக்கே – என்றால்
நஷ்டம் யாருக்கு? லாபம் யாருக்கு? ஆராய்ச்சியின் விளைவு!

திருமணப் பத்திரிகை விலை உயர்வாய் அச்சிட்டவரும்,
திருமணப் பட்டு மற்றும் நகைக் கடை வியாபாரிகளும்,

கல்யாண மண்டபம் கட்டியவரும், பூமாலை தொடுத்தவரும்,
கல்யாணச் சாப்பாடு தயாரிப்பவரும், தேங்காய் விற்பவரும்,

மாப்பிள்ளை அழைப்புக்கு கார் அலங்கரிப்பவரும், அருமையாய்
மணப்பெண்ணை அலங்கரிக்கும் அழகு நிலைய நிபுணிகளும்

கேட்டு ரசிக்காத கச்சேரி செய்த வித்வான்களும், பல முறை
போட்டுப் பார்க்காத வீடியோக்களை எடுத்த விற்பன்னர்களும்,

பிழைக்க வழி தேடும் விஷயமாகிவிட்டது, திருமணங்கள்;
பிழைப்பதில்லை இக்காலத்தில், பல திருமண பந்தங்கள்!

சுற்றத்தாருக்கு பயண மற்றும் பரிசுச் செலவு நஷ்டம்;
சற்றே யோசித்தால், திருமண விருந்து மட்டும் லாபம்!

விருந்து 'பாக்டீரியா' சகிதம் அன்று அமைந்துவிட்டால்,
மருந்து வாங்கப் பண நஷ்டம்; மருத்துவருக்கு லாபம்!

பெண்ணை ஈன்றவருக்கு பெரும் பொருள் நஷ்டம்;
பெண்ணின் தோழிகளுக்கு கூடிச் சிரித்தது லாபம்!

பெண் வாழாவிட்டால் அவள் வாழ்வே நஷ்டம்;
பெண் விவாகரத்து செய்தால் வக்கீலுக்கு லாபம்!

அன்புடன் எல்லோரையும் நேசிக்கும் காலம் மலருமா?
பண்புடன் கூடி வாழ எல்லா ஜோடிகளுக்கும் முனையுமா?

குறையின்றி பெருவாழ்வு அனைவரும் பெற்றிட
இறையின் கருணையை வேண்டுவதே ஒரே வழி!

ராஜி ராம்
Drugmachine is offline


Old 06-02-2012, 05:47 PM   #5
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
இன்றைய தலைமுறையில் நடைபெரும் (உபநயனம்) பூணூல் சடங்கு பற்றிய திரு விக்ரமன் அவர்களின் நேர்முக விவரணம் அற்புதம் . லௌகீக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்கால பிராமணர்க்கு உபநயனம் வெறும் சமூகச் சடங்காக மாறிவிட்டது . உபநயனம் வேத அத்யயன த்திற்கு தகுதியாக பிரமச்சர்யாஸ்ரமத்திற்கு கொண்டு செல்லும் ஓர் சடங்கு (investiture ceremony ) . நடைமுறையில் வெகுசில குழந்தைகளே வேதம் பயில செல்கின்றனர் . மற்றவர்களுக்கு பூணூல் ஒரு ஜாதி சான்றாக உதவுகிறது . நாம் இந்த உண்மையை கண்டும் காணாமலும் நம்மையே ஏமாற்றி வருவது ஒரு துரதிஷ்டிரமே . இதை வெகு அழகாக விவரித்திருக்கிறார் நண்பர் விக்ரமன் . நன்றி .
நலம்கொரும்
ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு.
9mm_fan is offline


Old 06-02-2012, 05:50 PM   #6
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
Dear Vikrama,

I liked this piece. I read it twice fully. The humour was top class. The pain of the reality was subtle yet not missed - particularly in this line "பையனின் குடும்பத்தாரின் பிராமண அப்பிராமண உறவினர்களும் நண்பர்களும் கியூ வரிசையில் சென்று ஒவ்வொருவராகக் கவரைக் கொடுத்துப் போட்டோ ........." A good attempt at laughing at ourselves. Thank you.
Beerinkol is offline


Old 06-02-2012, 06:00 PM   #7
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
Sri Vikrama -

Hindu rituals have evolved to mainly support the networking needs of the population ...
Enjoyed reading your description regardless - felt as if I was attending the function ...

Regards
Paul Bunyan is offline


Old 06-03-2012, 11:48 PM   #8
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
இந்த விக்ரமன் சொல்வது அக்ரமம். காலம் இருக்கிற இருப்பில் ஏதோ ஓய்வு கிடைக்கும்போது அல்லது கஷ்டம் வரும்போது தான் கடவுளை நினைக்க முடிகிறது. மூன்று வேளை மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார யாருக்குப் பொழுது கிடைக்கிறது. உபநயனம் என்பது ஒரு சமூகச் சடங்காக மாறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதைப் புரிந்துகொள்ளாமல் இன்னும் 18 ஆம் நூற்றாண்டிலேயே இருந்து கொண்டு புலம்புகிறார் அவர். காலம் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கையில் இந்த மட்டும் உபநயனமாவது செய்கிறார்களே என்று சந்தோஷப்படுங்கள்.

இந்த மாதிரியான கடிதங்களைத் தான் நான் எதிர்பார்த்தேன். மறுமொழி தந்த அனைவரும் உபநயனம் சமூகச் சடங்கானது தவிர்க்க முடியாமல் இருப்பது பற்றி உண்மையான வருத்தம் தொனிக்கப் பேசியுள்ளார்கள். ஆறுதலாக இருக்கிறது. எப்பொழுது ஒரு சமூகம் தன்னைத் தான் விமரிசனம் செய்து கொண்டு, தன் நிலையின் தாழ்வையும் தன்னால் செயல்பட முடியாமையையும் உணருகிறதோ அப்பொழுது அதன் எதிர்காலம் ஒளியை நோக்கி நகருவதாகக் கொள்ளலாம்.

மற்றொரு ஆறுதலான விஷயம். முன்னொரு காலத்தில் இதே தளத்தில் தமிழில் எழுதியதற்காக நான் எச்சரிக்கப்பட்டேன். என் பதிவு நீக்கப்பட்டது. நான் எழுதிய தமிழ்க் கவிதைகளைக் கூட ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. தமிழ் பிராமின் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழைப் புறக்கணிப்பது போலித்தனம் என்று நான் கிண்டல் செய்தேன். இன்று தமிழில் எல்லோரும் சுதந்திரமாக எழுத அனுமதிக்கப்படுவது மகிழ்ச்சி தரும் மாற்றம். இணைய தளம் தன்னை உணர்ந்து திருத்திக் கொண்டது போல பிராமண சமூகமும் தன்னை உணர்ந்துகொண்டு திருத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

எதிர்வினை ஆற்றிய அனைவருக்கும் நன்றி.

திருமதி ராஜி ராம் அவர்கள் சப்தபதி பற்றி எழுதி இருநதார்கள். அவர்களுக்குக் காணிக்கையாக அதன் பொருளை உள்ளடக்கிய என் கவிதை ஒன்றைக் கீழே தருகிறேன்.

ஸப்தபதி

ஏழு அடி வைப்பது எதற்காக?
இரு மனம் இசைந்து ஒன்றாக.

முதலடி வைக்கையில் வேண்டுவதோ
முகுந்தன் அருளால் மிகு உணவு.

இரண்டாம் அடியை எடுப்பது
இலட்சுமி நாயகன் புஷ்டி தர

மூன்றாம் அடியை வைக்கும்போது
முராரி காப்பான் விரதங்களை.

நான்காம் அடியை வைப்பதனால்
நாரணன் அளிப்பான் நல்ல சுகம்.

ஐந்தாம் அடியால் வேண்டுவது
அரியின் அருளால் பசுச் செல்வம்.

பருவ காலங்கள் துணை புரிய
பிரார்த்திப்பது தான் அடுத்த அடி.

ஏழாம் அடியை வைப்பதனால்
இறைவனிடம் வேண்டும் வரம் என்ன?

கணவன் செய்யும் நற்பணிகள்
காரியம் யாவினும் கைகொடுக்க
கண்ணபிரான் அருள் பின் தொடர்க.

ஏழடி நடந்த நீ என் தோழி.
என்றும் விலக்கோம் நம் நட்பை.
சிந்தனையில் நாம் ஒன்றாவோம்.
செயலிலும் நாம் ஒன்றாவோம்
உள்ளத் தூய்மை அன்புடனும்
ஒன்றாய் இன்பம் அனுபவிப்போம்.

இருக்கு வேதம் நீ என்றால் இசைக்கும் சாமம் நான் ஆவேன்
பொறுக்கும் பூமி நீ என்றால் பொழியும் வானாய் நானிருப்பேன்
விளையும் வயலாய் நீ இருப்பாய். விதையாய் உன்னுள் மறைந்திடுவேன்
செல்லும் வாக்காய் நீ இருக்க, சிந்தனை மனமாய் நான் இருப்பேன்

இன்சொல் நங்காய் என்னிடம் வருக.
நன்மக்கள் பேறும் நலிவிலாச் செல்வமும்
பெற்று நாம் வாழ்வோம், பெரும் புகழ் அடைவோம்

**********************************
மந்திரம் என்னவோ உயர்ந்தது தான்.
மற்றதன் பொருளும் உயர்வுடைத்து.
இன்று எவர் அறிவார் இதன் பொருளை?
எடுத்துச் சொல்வார் எவரும் இலை!
பொருளே குறியாம் புரோகிதரோ
பொருள் அறிந்தாலும் சொல விரும்பார்
அடுத்த வரும்படி அவர் கவனம்
அவசரமாகச் சென்றிடுவார்.
Beerinkol is offline


Old 06-04-2012, 03:27 AM   #9
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
திரு விக்ரமன் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் சப்தபதி விளக்கக் கவிதை மிக அருமை! மிக்க நன்றி.

இந்த இணையதளத்தில் தமிழில் மட்டும் எழுதி, ஆங்கில மொழி பெயர்ப்புத் தராதவள் நான்!


தமிழ் அறிந்தவர்கள் படித்தால் போதுமே என்ற நல்லெண்ணம்தான் காரணம்!!

குறிப்பு: 'காணிக்கை' என்பது மிகப் பெரிய சொல்! அதை உபயோகித்தது, கொஞ்சம் என்னை நெளிய வைத்தது.
S.T.D. is offline


Old 06-04-2012, 10:57 AM   #10
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
திரு விக்ரமன் அவர்களுக்கு
முதல் தலை வணக்கம்,நலம் நலமறிவ ஆவல், நீங்கள் சொன்ன மாதிரி இங்கு தமிழ் மட்டும் அல்லாமல் பிராமணர்களும் வேண்டாம் சொன்னவர்கள் உண்டு.
ஆனால் அதை சொன்னவர்கள் இப்போது இல்லாமல் போய்விட்டார்கள்...ஆனால் காலம் மாறும் ...உண்மை என்றும் மாறாது....
S.T.D. is offline


Old 06-04-2012, 12:51 PM   #11
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
>>இருக்கு வேதம் நீ என்றால் இசைக்கும் சாமம் நான் ஆவேன்
பொறுக்கும் பூமி நீ என்றால் பொழியும் வானாய் நானிருப்பேன்
விளையும் வயலாய் நீ இருப்பாய். விதையாய் உன்னுள் மறைந்திடுவேன்
<font color="#006400">செல்லும் வாக்காய் நீ இருக்க, சிந்தனை மனமாய் நான் இருப்பேன்
Slonopotam845 is offline


Old 06-04-2012, 02:40 PM   #12
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default
மந்திரம் என்னவோ உயர்ந்தது தான்.
மற்றதன் பொருளும் உயர்வுடைத்து.
இன்று எவர் அறிவார் இதன் பொருளை?
எடுத்துச் சொல்வார் எவரும் இலை!
பொருளே குறியாம் புரோகிதரோ
பொருள் அறிந்தாலும் சொல விரும்பார்
அடுத்த வரும்படி அவர் கவனம்
அவசரமாகச் சென்றிடுவார்.
என் புலம்பல் இதுவேதான்!!

"ஏழு அடிகள் வைக்கும்போது வாழ்க்கைத்துணையாளுக்கு
ஏழு உறுதி மொழிகள் தந்து, அவற்றை மதிக்காததேன்?"
PhillipHer is offline


Old 06-04-2012, 02:59 PM   #13
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
The pendulum seems to be still swinging in only one direction. The spousal relationship is a two-way street. The Ezhu adigaL concept is fine and the obligations are to be kept. However, there are counter-obligations on the part of the tuNaiyAL too. In paper everything may look fine but in real life there are so many variables which may interfere with the execution of the resolution. Nobody talks about the counter-obligations---why? Is it because they were/are not spelled out?

I am talking about what Janaka said to Rama when he gave his daughter SItA in marriage,
"iyam SItA, mama sutA
sahadharmachArI tava
prateechcha chainAm bhadram te
pAnIm griheeshwa pAnina
partivratA mahAbhAgA
chAyevAnugatA sadA"

(Here is my daughter SItA, who will ever walk with you the path of dharma. Take her hand in yours. Blessed and devoted she will ever walk with you like your own shadow)

When the shadow surpasses the real thing then problems will start. I am talking about the discord that is getting rampant these days.
radikal is offline


Old 06-04-2012, 07:02 PM   #14
Big A

Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
Default
என் புலம்பல் இதுவேதான்!!

"ஏழு அடிகள் வைக்கும்போது வாழ்க்கைத்துணையாளுக்கு
ஏழு உறுதி மொழிகள் தந்து, அவற்றை மதிக்காததேன்?"
மந்கிரங்கள சொல்லும்போது பொருளை விளக்கிச் சொல்லியிருந்தால், எப்பொழுதும் இல்லாவிட்டாலும், எப்பொழுதாவது மணமக்களுக்கு இந்த ஞானோதயம் வரும். தன்னைச் சோதனை செய்து கொள்ள வாய்ப்பு உண்டு. மந்திரங்கள் புனிதமானவை, அவற்றிற்கு அர்த்தம் பார்க்கக்கூடாது என்று சொல்லி, கடமைக்கு மம்போ-ஜம்போ என்று உளறிவிட்டுப் போகிறார் புரோகிதர்.

அவர் சரியாகச் சொல்கிறாரா என்பது கூட நமக்குத் தெரியாது. நான் பார்த்த ஒரு அப்பிராமணக் கல்யாணத்தில் புரோகிதர் ஒரு ஐந்து மந்திரங்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த மந்திரங்கள். அவை என்ன வென்றால்
1த்ரயம்பகம் யஜாமஹே
2ஸர்வ மங்கள மாங்கல்யே
3 தாம் ம ஆவஹ ஜாதவேதோ
4 கணானாம் த்வா
5 ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம்
இவற்றை வைத்துக் கொண்டே முக்கால் மணிநேரத்தை ஓட்டினார். ஐயரு நெறைய மந்திரம் சொல்லி நல்லா செஞ்சு வெச்சாரு என்று சொல்லி பேசியதை விட அதிகமாகத் தட்சிணை கொடுத்தார் என் நண்பர், பெண்ணின் தகப்பனார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
நம் நிலையும் அதுவே தான்.

ஸாஸ்திரிகள் வைத்துச் செய்தால் தான் கல்யாணம் அங்கீகாரம் பெறும் இல்லாவிட்டால் ஜாதிப்ரஷடம் ஆகிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டு பெற்றோர் அவர் ஏதாவது சொல்லி விட்டுப் போகட்டும். தாலி மட்டும் கட்டிவிட்டால் போதும் என்று நினைக்கின்றனர்.

ஏன் இந்த மனுஷன் புகையில் நம்மைத் திக்குமுக்காட வைத்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் எப்பொழுது நம்மை விடுதலை செய்வார், எப்பொழுது நாம் தனிமையில் சந்தித்துப் பேச முடியும் என்பதே எண்ணமாக இருக்கின்றனர் மணமக்கள்.

எவருக்கும் நம்பிக்கை இல்லை. சமூக அங்கீகாரம் இல்லாமல் போகுமோ என்ற பயம் தான் நம் சடங்குகளின் அஸ்திவாரம்.

போலித்தனத்தை விட்டெறிந்து மந்திரங்களைத் தமிழில் சொல்வது என்று வைத்துக் கொள்வோம். ஸாஸ்திரிகள் தேவை இல்லை. நம்மில் வயதான, விவரம் தெரிந்த ஒருவரைத் தலைமை தாங்கி நடத்தித் தரச் சொல்வோம். ஸாஸ்திரிகளின் மிதமிஞ்சிய தட்சிணைக்குக் கடிவாளம் போடப்படும்.

ஒரு உறுத்தல் என்னவென்றால், வரும்படி மிகுதியாக வருவதால் தான் பலர் வேத அத்தியயனத்துக்கு வருகின்றனர். வேதம் உயிர் பிழைத்து இருக்கிறது. வரும்படி இல்லை என்றால் எவரும் வேதம் கற்க மாடாடர்கள். வேதம் கற்பார் இன்றி அழியும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாய் மொழியாகக் காப்பாற்றப்பட்டு வந்த வேதம் புத்தகத்துள் முடங்கிவிடும்.
Big A is offline


Old 06-04-2012, 07:42 PM   #15
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
Dear Vikrama sir,

Your observations in the function and its narration is very fine and I request you to wirte on many functions like this. But only one doubt I have which is that after the rituals followed whether the purpose is achieved or not? Does the poonul has its effect or not? Generally we call poonal as a Raksha and it enable us to Chant Gayatri Mantra. Now a days we give respect to poonal only on avaniavittam day and remaining days we are not respecting the same by doing sandhyavandhanm daily. If that is so does Upanayanam has its real effect ? or only name sake.

Thanks in advance.
NeroASERCH is offline


Old 06-04-2012, 09:58 PM   #16
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
Sri. Vikrama, Greetings.

ஒரு உறுத்தல் என்னவென்றால், வரும்படி மிகுதியாக வருவதால் தான் பலர் வேத அத்தியயனத்துக்கு வருகின்றனர். வேதம் உயிர் பிழைத்து இருக்கிறது. வரும்படி இல்லை என்றால் எவரும் வேதம் கற்க மாடாடர்கள். வேதம் கற்பார் இன்றி அழியும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாய் மொழியாகக் காப்பாற்றப்பட்டு வந்த வேதம் புத்தகத்துள் முடங்கிவிடும். I don't know whether 'vathyars' learn Vedas. I thought they just learn enough slokas to perform the rites only. Recently our son got married; Sri.Sangom provided me the translation for the Sapthapadi Slokams. I had that printed and gave that to few persons ( including the bride & groom). Vadhyar lacked the knowledge though.... for the பொரி இடல் rite, bride's brother gave the பொரி to bride and she put the பொரி in the Agni! nobody asked about that either......

I don't think Veda adhyayanam is protected by the greedy sastris and vadhyars.

Cheers!
Paul Bunyan is offline


Old 06-04-2012, 10:19 PM   #17
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
அதீத பயம் தான் .
I read this some where. I will try to get the reference.

‘பர்தாவின் தலைமீது ஏறு, வீட்டிலுள்ள மாமனார், மாமியார், நாத்தனார், மைத்துனர்களுக்கு யஜமாநியாக விளங்கு” என்கிறது வேதம். ‘பத்நீஹி பாரிணஹ்யஸ்யேசே” - ‘வீட்டிலுள்ள ஸர்வ சொத்துக்களுக்கும் பத்நியே யஜமாநி” என்று ச்ருதி பலவிடங்களில் உத்கோஷிக்கிறது. நம் வைதிக மதம் ஒன்றிலேயே புருஷனைவிட ஸ்த்ரீக்கு குடும்பத்தில் அதிக பாத்யதை காட்டும் மஹிமை உள்ளது. தம்பதிகளுக்குள் வைமநஸ்யம் (மநஸ்தாபம்) ஏற்பட்டுவிட்டால் புருஷன்தான் வீட்டைவிட்டு அகலவேண்டும். ப்ரவிச்ய ஹோமத்தில் குடும்ப ஸர்வாபிவ்ருத்திக்கும் (குடும்பதிலுள்ளோர் அனைவரின் அனைத்துவித நன்மைக்கும்) ப்ராத்தனை செய்யப்படுகிறது.

என் புலம்பல் இதுவேதான்!!

"ஏழு அடிகள் வைக்கும்போது வாழ்க்கைத்துணையாளுக்கு
ஏழு உறுதி மொழிகள் தந்து, அவற்றை மதிக்காததேன்?"
TorryJens is offline


Old 06-04-2012, 10:38 PM   #18
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
Dear Vikrama sir,

Your observations in the function and its narration is very fine and I request you to wirte on many functions like this. ........
Now a days we give respect to poonal only on avaniavittam day and remaining days we are not respecting the same by doing sandhyavandhanm daily. If that is so does Upanayanam has its real effect ? or only name sake.

Thanks in advance.
எழுதி எழுதி அலுத்துப் போயத் தான் உட்கார்ந்திருக்கிறேன்.
Are we hypocrites?
நம்ம ஆவணி அவிட்டத்தின் சிறப்பை அறிய மேலே கண்ட பக்கத்தில் பதிவு எண் 1 மற்றும் 8 ஐப் பார்க்கவும். 22, 36

பூணூல் கல்யாணம் பற்றி ஏற்கெனவேயும் எழுதி இருக்கிறேன்.
Are we hypocrites?
இதில் பதிவு எண் 46ஐப் பார்க்கவும்.
Drugmachine is offline


Old 06-04-2012, 10:46 PM   #19
Big A

Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
Default
....Sri.Sangom provided me the translation for the Sapthapadi Slokams. I had that printed and gave that to few persons ( including the bride & groom). Vadhyar lacked the knowledge though....
Cheers!
1997 இல் என் பெண் கல்யாணத்தின்போது விவாஹ மந்திரங்களின் பொருள் என்ற சிறு கையேடு ஒன்றை அச்சிட்டேன். விவாஹத்துக்கு வந்த பிராமணர்களுக்கெல்லாம் 400 பிரதிகள் நானே என் கைப்பட விநியோகித்தேன். ஸாஸ்திரிகள் உள்பட. மறுநாள் மண்டபத்தைக் காலி செய்யும் போது நாற்காலிகளின் கீழிருந்தும், ஜன்னல்கள், கதவு இடுக்குகளிலிருந்தும் கசங்கிய நிலையிலும் புத்தம் புதிதாகவும் கிடைத்த கையேடுகளின் எண்ணிக்கை 390. மீதிப் பத்துப் பேராவது படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை தளரவிடாமல் காப்பாற்றியது.
Big A is offline


Old 06-05-2012, 02:07 AM   #20
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
1997 இல் என் பெண் கல்யாணத்தின்போது விவாஹ மந்திரங்களின் பொருள் என்ற சிறு கையேடு ஒன்றை அச்சிட்டேன். விவாஹத்துக்கு வந்த பிராமணர்களுக்கெல்லாம் 400 பிரதிகள் நானே என் கைப்பட விநியோகித்தேன். ஸாஸ்திரிகள் உள்பட. மறுநாள் மண்டபத்தைக் காலி செய்யும் போது நாற்காலிகளின் கீழிருந்தும், ஜன்னல்கள், கதவு இடுக்குகளிலிருந்தும் கசங்கிய நிலையிலும் புத்தம் புதிதாகவும் கிடைத்த கையேடுகளின் எண்ணிக்கை 390. மீதிப் பத்துப் பேராவது படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை தளரவிடாமல் காப்பாற்றியது.
Sri. Vikrama,

That is sad. That shows the disinterest amoung the community. In my case, I printed only few copies. Mostly youngsters obtained those copies from me. I didn't give itto anyone; I waited for them to approach me. One Chinese couple took that with them; at work, one white girl took it from me ( she is married to a Hindu, Indian. She was eager to know what she said when she walked 'around the fire').

Cheers!
doctorzlo is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 3 (0 members and 3 guests)
 

All times are GMT +1. The time now is 11:18 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity