View Single Post
Old 03-30-2012, 12:13 PM   #13
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
I would like to present some excerpts from a speech EVR gave to a teacher's conference in Polur on April 24, 1927. A copy of this speech is available at this site.
......சாதாரணமாக ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாம் என்றால், முதலில் நமது பெண் மக்களுக்
குத்தான் உபயோகப்படுத்தலாம்.... ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் இயந்திரங்களாக இருக்கின்றனர்.

[How much has this changed, may be some change among the India9% as Y would say, but, I think most people will agree that India90% is just as much "us"]
கல்வி என்பதுவயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல, அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எ
டுத்துக்கொண்டால், மக்கள் சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும், அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடும் கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாகத்தக்கதாக இருக்கவேண்டும். இவைகளை அறிந்தே வள்ளுவரும் -- உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் -- என்றும் -- தாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் -- என்றும் -- ஒத்தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் -- என்றும் சொல்லி இருக்கின்றார்.

[This is so true even today, in fact more true today. Education has become nothing more than training for a good paying job -- வயிற்றுப் பிழைப்பு alone.]
நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்கவேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்கவேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும்.


.... more to come
brraverishhh is offline


 

All times are GMT +1. The time now is 07:23 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity