Thread
:
அன்றும் இன்றும் என்றும் -கவிஞர் வாலி
View Single Post
08-06-2011, 06:21 AM
#
14
NeroASERCH
Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
"ராம நாமமொரு வேதமே ராக தாளமொடு கீதமே"
படம்: ஸ்ரீராகவேந்திரர்
இசை: இளையராஜா
வரிகள்:வாலி
குரல்கள்:வாணிஜெயராம்,யேசுதாஸ்
பாலசந்தர் தயாரிப்பில் ரஜினியின் 100'வது படமாக வெளிவந்தது ஸ்ரீ ராகவேந்திரர்.
ரஜினியின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் இது.
இளையராஜாவும் வாலியும் சேர்ந்து பல அருமையான மெட்டுக்களை உருவாக்கினர்
அதில் மிகவும் குறிப்பிடத்தக்க பாடல்கள் இரண்டு
1. ராமநாமமொரு வேதமே
2. ஆடல் கலையே தேவன் தந்தது
அம்மனோ அம்மானோ, நரனோ நாராயணனோ யாரைப்பற்றியும் எல்லோருக்கும் புரியும் விதமாக சொல்ல வாலியை தவிர வேறு ஆள் உண்டா??
வாணிஜெயராமும், யேசுதாஸும் அழகாக பாடல் இதோ ராமமாலை
ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனமெனும் வீணை மீட்டிடுவோம்
இசையெனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு
ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன்
அவதாரம்
அருள்சேர் ஜானகி
அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமன் நாயகி சாபம் தீர்த்தான்
ஆஆ..
ஓர் நவமியதில் நிலமெல்லாம் புலர
நினைவெல்லாம் மலரவே
உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க
மறையெல்லாம் துதிக்கவே
தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகன் மகள் வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட
திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும்
மரவுறி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன் வர
இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிட துணிந்தவனாம்
ஸ்ரீ ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும்
நெஞ்சே மனம் இனிக்க
தினம் இசைக்க குலம் செழிக்க
நிதம் நீ சூட்டிடு பாமாலை
இதுதான் வாசணை பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது
இசை சேர் மனமே நாளும் ஓது
ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனமெனும் வீணை மீட்டிடுவோம்
இசையெனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு
ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே
ராமாயணத்தை முழுவதும் ஒரு பாடலிலேயே சொல்லிய வாலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
Quote
NeroASERCH
View Public Profile
Find More Posts by NeroASERCH
All times are GMT +1. The time now is
08:51 PM
.