![]() |
தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக!
http://tamilandvedas.files.wordpress...pg?w=300&h=200
தமிழ் நாட்டில் இப்பொழுது பயன்படுத்தப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்குப் பொருத்தமானதல்ல. ஏற்கனவே இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இதைப் பயபடுத்தாமல் வேறு பாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காலப் போக்கில் தமிழர்களிடையே ஒற்றுமைக் குறைவை ஏற்படுத்தும். ஆகவே தமிழ் நாடு அரசு உடனடியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றவேண்டும். இந்தப் பாடல் பரதக் கண்டம் பற்றிப் பாடுகிறது. ஆனால் இன்றோ தமிழர்கள் உலகம் முழுதும் வாழ்கிறார்கள் “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்” என்று துவங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடல் பல வகைகளிலும் குறையுடையது. முதலாவது அது உருக்குலைந்த பாடல். பாரத நாட்டின் மாபெரும் செல்வமான சம்ஸ்கிருதத்தைப் பழித்துக் கூறிய வரியை வெட்டிவிட்டுப் பாடுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் கோவிலில் வைக்க அழகான சிலையைச் செய்துவிட்டு அதன் மூக்கை மட்டும் உடைத்துவிட்டுப் பூஜைக்கு வைத்தது போல இருக்கிறது. மேலும் சம்ஸ்கிருத வெறுப்பில் பிறந்த பாடல். சுந்தரனார் சம்ஸ்கிருதம் பற்றிக் கூறிய வரியை அறிஞர் உலகம் ஏற்காததால்தான் அந்த வரியை வெட்டிவிட்டு சிதைந்த பாடலை தமிழ் வாழ்த்தாக்கி இருக்கிறார்கள். சுந்தரம் பிள்ளையோவெனில் அந்த வாழ்த்திலும் சரி, அவரது மனோன்மணீய நாடகத்திலும் சரி பக்கத்துக்கு பக்கம், வரிக்கு வரி சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். சுருங்கச் சொன்னால் சொன்னது ஒன்று, செய்தது வேறு. பாரதியார் எழுதிய “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” பாடல் அற்புதமான பாடல். அந்தக் கவிஞனுக்கு உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி வாக்கினிலும் ஒளி உண்டானதால் அவன் வேண்டியபடியே பராசக்தி அவனுக்கு மந்திரம் போல் சொல்லின்பம் கொடுத்துவிட்டாள். பாரதி பெரிய கவியானாலும் தமிழ் வாழ்த்து என்று பார்க்கையில் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் இன்னும் அற்புதமாக அமைந்துவிட்டது. அதில் தமிழ் அன்னையை அலங்கரிக்கும் ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் திருக்குறள், நால்வர், சேக்கிழார், ஆழ்வார் பாடல்கள் ஆகிய அனைத்தும் போற்றப்படுகின்றன. இதோ பாடலை நீங்களே படித்துப் பாருங்கள். எவ்வளவு பொருள் பொதிந்த பாடல். யாராவது ஒருவர் இதற்கு கவர்ச்சிகரமான இசை அமைத்துவிட்டால் மற்ற பாடல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இது மேடை ஏறும். முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் துணிகர உத்தரவுகளுக்குப் பெயர்போனவர். அவர் நினைத்தால் இதை ஓரிரவில் செய்யலாம். அதுவே நமது வேண்டுகோளும் கூட. காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை -யாபதியும்,கருணை மார்பின் மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில் மேகலையும், சிலம்பார் இன்பப் போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ ளாமணியும் பொலியச் சூடி, நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க ! நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார் மொழியிருக்கச் சேக்கி ழாரின் பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித் திரமிருக்கப் பகலே போன்று ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார் குறளிருக்க, நமது நற்றாய், காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற் கனிபெருகக் கண்டி லோமோ ! -சுத்தானந்த பாரதியார் இந்தப் பாடலுக்கு நல்ல இசை அமைப்பவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். பரிசு காத்திருக்கிறது ! |
"சுந்தரனார் சம்ஸ்கிருதம் பற்றிக் கூறிய வரியை அறிஞர் உலகம் ஏற்காததால்தான் அந்த வரியை வெட்டிவிட்டு சிதைந்த பாடலை தமிழ் வாழ்த்தாக்கி இருக்கிறார்கள். "
அந்த வரிகள் என்ன என்று சற்றுக் கூறுங்களேன்? |
ஆரியம் போல் வழக்கொழிந்து அழிந்து சிதையா உன்...... என்று சம்ஸ்கிருதத்தைக் குறைகூறியிருக்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் என் மனைவி அழகானவள் என்று சொல்ல வந்து விட்டு, அடுத்தவீட்டு செத்துப்போன மூளி போல இல்லாமல் என் மனைவி இந்திர லோக சுந்தரி என்று சொன்னது போல இருக்கிறது. மகத்தான தமிழ் மொழியைப் படிக்கும்போது ஆனந்தம் கொப்புளிக்கிறது. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிவிட்டு மற்றவர்களைத் திட்டிக்கொண்டே காலம் தள்ளுபவர்களைப் புரிந்துகொள்ளுவது கடினமாக இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் எழுதிய நாடகம் தமிழ் ஒரிஜினலும் அல்ல. ஆங்கி லநாடகத்தின் தழுவல். இல்தி மாற்று மொழிகளைத் திட்டுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.
|
நீராடும் கடலுத்த என்று தொடங்கும் மனோன்மணீய பாடலில் "கன்னடமும் களிதெலுங்கும், கவின் மலையாளமும் துளுவும் , உன் உதரத்து உதித்தெழுந்தே
ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே" என்ற வரிகள் வருகின்றனவா என்று நிச்சய மாக தெரியவில்லை. ஆனால் நீராரும் கடலுத்த ....... என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்க தகுதியில்லாதது என்பதற்கு வேறு ஒரு பலமான காரணம் உள்ளது. "சீரிளமை திறம் வியந்து" வரை சரிதான். பின்னர் "செயல் மறந்து வாழ்த்துதுமே" என்பதில் பொருட்குற்றம் உள்ளது. வாழ்த்துதலாகிய செயல் மனம் நிறைய மகிழ்வோடும் முழு நினைவோடும் செய்ய வேண்டிய ஒரு செயல். அதை செயல்மறந்து என்ன செய்கிறோமென்ற நினைவின்றி செய்வது சரியல்ல. அப்படிச்செய்தால் அச்செயல் ஒரு வாழ்த்தாகாது. அது பேத்தலாகி விடும். இவ்வாறு பொருட்குற்றம் வரக் காரணங்கள் பலவாகலாம். இந்தப்பாடலை பொறுத்தவரை கண்ணை மறைக்கும் ஆரிய வெறுப்பில் வாழ்த்துதல் பேத்தலாகி விட்டது அவ்வளவுதான். Cheers. |
Hi Suraju
நக்கீரரே! என்ன துணிவு உமக்கு. சொற் குற்றம், பொருட் குற்றம் என்று அடுக்கிகொண்டே போகிறீர். ஜாக்கிரதை, நெற்றிக் கண்ணைத் திறந்து விடுவேன் என்று யாராவது முழங்கப் போகிறார்கள் |
'மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது', என்ற வரி தற்போது மிகப் பிரபலம்! உபயம்: விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்று!
அதன் எதிரொலிதானோ இந்த மாற்றங்களின் மீது வரும் ஆவல்? http://www.tamilbrahmins.com/images/smilies/bump2.gif |
Change is inevitable. It is a natural law.
Nothing remains stagnant in the world, nay, universe. Earth is orbiting the sun.Sun is orbiting, milky way is rushing towards unknown destination. They say it is moving towards stars in the Leo Constellation. All the galaxies are expanding. What is the end. We don't know. But one thing is certain. Everything is changing. No one can stop the changes. So, what is wrong in asking for a change? I dont dress like my dad. My dad didn't dress like his dad. My son is already asking for design clothes with famous brand names. My granddad did Tri Kala Sandhyavandhana My dad did Sandhya vandhana two times a day. I am doing only in the morning before mingling with the mad rush of London crowd. My son is doing Sanhyavandhana nearly daily. His son.......? God only knows. We are all washed away in the flood of Time (kaala Vellam). Let us welcome CHANGE. Thanks for listening to my PULAMBAL. |
dear swaminathan sir !
thanks for pulambal enpathil therikirathu ungal alambal .nice writeup about change for a change guruvayurappan |
ஶ்ரீ ராஜு மற்றும் அன்பர்களே,
"நீராடும் கடலுத்த என்று தொடங்கும் மனோன்மணீய பாடலில் "கன்னடமும் களிதெலுங்கும், கவின் மலையாளமும் துளுவும் , உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே" என்ற வரிகள் வருகின்றனவா என்று நிச்சய மாக தெரியவில்லை." ஆம், வருகிறது. அதுமட்டுமல்ல மேலும் சொல்கிறார்: சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வயப்பாமே. ... வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். ஆரியத்தைப் பழித்திடும் சுந்தரனார் தன்பெயரை மாற்றிக்கொள்ள விழையவில்ல. அவருடைய தமிழ்த்தாய் வாழ்த்திலேயே எத்தனை வடமொழிச் சொற்களைக் காஇயாளுகிறார்? இதோ சில: வதனம், பரதகண்டம், திலகம், வாசனை, உதரம், அநாதி, சரிதம்.. |
ஒரு மனிதன் வெறுப்பில் வெந்து சாகும் போது அவனுக்கு அறிவுக் கண் மறைக்கப்படும். சுந்தரனார் வெறுப்பில் எழுதிய சொற்கள், காலம் என்னும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அதைத் தமிழ் மொழி வாழ்த்தாகத் தேர்ந்தெடுத்தபோதே அதில் ஒரு வரியைப் பிடுங்கி குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டர்கள்! இப்போது இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் பிட்டுகொண்டு போய்விட்டார்கள். ஆள் ஆளுக்கு தனித்தனி தமிழ் வாழ்த்துக்கள் வைத்துக் கொண்டுவிட்டார்கள்.இதுதான் சுந்தரனார் பாட்டின் செல்வாக்கு. கட்டுண்டோம், பொறுத்திருந்தோம், காலம் மாறும்!
|
Quote:
தமிழ்த் தானைத் தலைவர் பெயர் 'ஸ்டாலின்' என இருப்பது இந்தக் காலம்! எனக்கு ஓர் ஐயம்! ஏன் அவர் 'ச்டாலின்' என எழுதுவதில்லை? 'ஸ்' வடமொழி எழுத்து ஆயிற்றே! http://www.tamilbrahmins.com/images/smilies/spy.gif |
’ச்டாலின்’ பெயரானாலும் முதலில் ஒற்றெழுத்து வரக்கூடாதே? அவரது பெயரை எவரோ ’உருசிய குமாரர்’ என்று எழுதியிருந்தாக எங்கோ படித்த ஞாபகம். அதேபோல் மற்றவர் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ’எழில்மலை’ ஆகுமோ?
Quote:
|
'பொன்னவைக்கோ' என்பவரின் இயற்பெயர் தெரியுமோ? http://www.tamilbrahmins.com/images/styles/World/icons/icon3.png
தெரிந்தால் கூறுங்களேன்! (எனக்குத் தெரியும்!! http://www.tamilbrahmins.com/images/smilies/thumb.gif ) |
தெரியவில்லை. பதிலை எதிபார்த்து ஒரு கேள்வி: மிகப் பிரபலமான அரசியல் தலைவர் ஒருவர் பிறந்தபோது தட்சிணாமூர்த்தி என்று பெயரிடப்பட்டதாக ’விக்கி’ கூறுகிறது. அவர் யார் தெரியுமோ?
Quote:
|
கலைஞர் கருணாநிதி Karunanidhi - Wikipedia, the free encyclopedia
first sentence |
Quote:
|
Quote:
|
|
கருணாநிதி தமிழினத் தலைவர் என்பதெல்லாம் அவருக்கு அவரே வைத்துக்கொண்ட பெயர்.
இப்போது மட்டும் அல்ல எப்போதுமே அவருக்கு இருக்கும் கவலை எல்லாம் தனது குடும்பத்தைப்பற்றியது மட்டுமே. பதவி சண்டை இல்லாமல் தனது மகன்களிடயே ஒற்றுமை வேண்டும். அழகிரியும் ஸ்டாலினும் தனது குடும்பம் கொள்ளையடித்து சேர்த்த பணத்தை தனது மகன்கள் இருவரும் பத்திரமாக காப்பாற்றிக்கொள்ளவேண்டும். 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுதலை ஆகவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா மீது தன்னால் போடப்பட்ட வழக்கில் அவருக்கு நீதிமன்றம் அவரை தண்டிக்கவேண்டும். இதுபோன்ற சுயநல் எண்ணங்கள் மட்டுமே அவரை ஆட்டிப்படைக்கின்றது. அவர் என்றுமே தமிழையும் தமிழனையும் பற்றி கவலைப்பட்டது கிடையாது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றபோது இவர் சோனியாவின் சேலைத் தலைப்பில் ஒளிந்துகொண்டு, 2ஜி வழக்கில் தனது மகளை விடுவிக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். தமிழுக்கும் தமிழனுக்கும் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் கருணாநிதி செய்த துரோகம் மன்னிக்கமுடியாதது. புருஷோத்தமர் போரில் புலி.வாள் எடுத்தால் வையம் நடுங்கும். அவர் இப்போது புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக்காண்பவரே... மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே!... மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே!....குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே!... என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன்.... இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். ....துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை.... தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்!...... ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்?.... ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்!... இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்... பராசக்தி படத்தில் அவர் எழுதிய வசனம் இது... ஏனோ இப்பொழுது இது நினைவுக்கு வந்தது..... |
மக்கள் மனோகரனாக மாறி விட்டார்கள்....
புருஷோத்தமர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்..... காலம் மாறும்போது கருத்துக்களும் மாறுகின்றன...... |
All times are GMT +1. The time now is 02:59 PM. |
Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2