Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
ஒய்.ஜி.மகேந்திராவின் பார்வையில் கலைஞர்கள் நிகழ்ச்சி, வரும் செவ்வாய்க்கிழமை, 25.01.2011 அன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது. எதிர்பாராத காரணத்தால் அறிவித்த படி பொங்கல் வாரத்தில் ஒளிபரப்பாகவில்லை.
தன்னுடைய தெய்வமாய் கருதும் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளுடன் நிகழ்ச்சியைத் தொடங்க உள்ளார் மகேந்திரன். அனைவரும் அவசியம் காண வேண்டிய நிகழ்ச்சி. நடிகர் திலகத்தைத் தொடர்ந்து மற்ற கலைஞர்களைப் பற்றியும் தன் நினைவுகளைப் பகிரந்து கொள்கிறார். அன்புடன் |
![]() |
![]() |
#2 |
|
பொங்கல் திருநாள் தொடங்கி வசந்த் தொலைக்காட்சியில் திரு ஒய்.ஜீ. மகேந்திரா அவர்கள் பங்கேற்கும் என் பார்வையில் என்ற புதிய நிகழ்ச்சி வர இருக்கிறது. இதில் திரையுலகில் தான் சந்தித்த, தன்னை மிகவும் பாதித்த, தான விரும்பிய, பல்வேறு கலைஞர்களையும் நிகழ்ச்சிகளையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். நடிகர் திலகம், ஜெமினி கணேசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., இயக்குநர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர், நாகேஷ், கே.பாலச்சந்தர் உட்பட பல்வேறு கலைஞர்களைப் பற்றி அவர் உரையாட இருக்கிறார்.
அனைவரும் நிகழ்ச்சிகளைக் கண்டு தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ராகவேந்திரன் |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|