Reply to Thread New Thread |
![]() |
#2 |
|
துளசி (ஸ்ருதி) பள்ளி இறுதியாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸாகிறாள். அவளுக்கு மேற்கொண்டு படித்து எஞ்சினீயர் ஆக வேண்டும் என்ற ஆவல். ஆனால் குடும்பத்தில் அவள் நிலை நேர்மாறானது. குறைந்த மாத வருமானத்தில் குடும்பத்தை ஓட்ட திண்டாடும் முத்துமாணிக்கம் (சுபலேகா சுதாகர்)தான் அவளது அப்பா. அப்பா, சித்தி (சாதனா), சித்தியின் பிள்ளைகள், பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறாள். சித்தியா? அப்படீன்னா அம்மா?. துளசியின் அம்மா யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டாளாம். (ஆரம்பிச்சுட்டாங்கப்பா கலாச்சார சீரழிவை). ஓடிப்போன மனைவி மேல் உள்ள ஆத்திரத்தையெல்லாம் அவள் விட்டுப்போன தன் மூத்த மகளான பாவப்பட்ட துளசியின்மேல் காட்டுகிறார் முத்துமாணிக்கம். அப்பாவே இப்படீன்னா சித்தியைப்பற்றி கேட்கணுமா?. கொடுமையோ கொடுமை. அப்பா அவளோடு பேசுவதுகூட கிடையாது. ஏதோ மூணு வேளை சோறு போட்டு, பள்ளியிறுதிவகுப்பு வரை இலவசக்கல்வியென்பதால் படிக்க வைத்துவிட்டார்கள். போதாக்குறைக்கு சித்தியின் மகனும் அக்கா என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல் அவளை உதாசீனப்படுத்துகிறான்
கொடுமைக்களமான அந்த வீட்டில் துளசியின் ஒரே ஆதரவு, ஊன்றுகோல், நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கம் (முத்துமாணிக்கத்தின் தாயான) அவளது பாட்டிதான் (எஸ்.என்.லட்சுமியம்மா, இந்த வயதிலும் என்ன தெளிவான குரல்வளம்..!!) |
![]() |
![]() |
#3 |
|
வேலாயுதம் போலீஸ் நிலையத்தில் இருக்கும்போதே, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், அவனுடைய வீட்டை சோதனையிடுகின்றனர். ஏராளமாக, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்கள் மாட்டுகின்றன. அத்துடன் துளசியின் போட்டோவும் அவர்கள் கையில் சிக்குகிறது. உடம்பு முழுக்க நகையும் நட்டுமாக 'உடன்பிறவா சகோதரி' போலத் தோன்றும் அவள் யாரென்று விசாரிக்க, அவள்தான் வேலாயுதம் கல்யாணம் பண்ணிக்க இருந்த பெண் என்று சொல்ல போலீஸாருக்கு அதிர்ச்சி. அவனுடைய மகள் வயதிருக்கும் பெண்ணுடன் அவனுக்கு கல்யாணமா என்று கேட்கும் அவர்கள் அவளுடைய வசதிபற்றியும் கேட்க, அவள் நடுத்தர வர்க்கத்துக்கும் சற்று கீழ் என்று தெரிய வருகிறது. அவள் போட்டிருக்கும் நகையெல்லாம் நாங்கள் கொடுத்ததுதான் என்று அக்கா ஒப்புக்கொள்கிறாள். உடனே போலீஸ்படை பறக்கிறது மாணிக்கத்தின் வீட்டுக்கு.
அங்கு போனதும், மாணிக்கத்தையும் அவர் மனைவியையும் 'லெஃப்ட் அண்ட் ரைட்' வாங்க, எல்லா உண்மையும் வெளிவருகிறது. போட்டோவைப்பார்த்து நகைகள் அத்தனையும் கைப்பற்றும் அவர்கள், துளசியியை தனியே விசாரிக்க, அவளைத்திருமணம் செய்ய வேலாயுதம் தன் பெற்றோருக்கு வேலாயுதம் ஐந்து லட்ச ரூபாயும், சித்தியின் மகளுக்கும் நகையும் கொடுத்தது தெரியவர, அவற்றையும் போலீஸ் ஒரே அமுக்கு. மாணிக்கத்துக்கு வேலாயுதம் கொடுத்திருந்த தங்க வாட்சும் போலீஸ் வலையிலிருந்து தப்பவில்லை. கைப்பற்றிய அனைத்தையும் லிஸ்ட் போட்டு, மாணிக்கத்திடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு போலீஸ் போய்விட, மாணிக்கமும் அவர் மனைவியும், 'இப்படி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போச்சே' என்று மனமுடைந்து நிற்கின்றனர். தனது இஞ்சினீயர் கனவு, அக்காவினால் பாழாகிப்போச்சேன்னு ஆத்திரமடையும் அவர்கள் மகன், அக்காவென்றும் பாராமல் துளசியை ஓங்கி அறைகிறான். அந்த அப்பாவிப்பெண், தனக்கு எதுவுமே தெரியாதென்று புலம்புகிறாளே தவிர அவன் அடிப்பதை தடுக்க முடியவில்லை. உடனே பாட்டி, 'உனக்கு எஞ்சினீயர் படிக்கணும்னா நீயும் உங்க அப்பனும் உழைச்சு அந்த பணத்தில் படிடா. ஒரு அப்பாவிப்பொண்னை வித்துட்டு அந்த பணத்துல ஏண்டா படிக்கணும்னு நினைக்கிறே?. உங்க நினைப்புனாலதாண்டா இப்போ எல்லாமே உங்களைவிட்டு போச்சு' என்று திட்டி விரட்டுகிறாள். வேலாயுதம் கைதானதிலும், துளசியின் கல்யாணம் நின்று போனதிலும் பாட்டிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. விசாரணைக்கு வந்த போலீஸாருக்கு, நலங்குக்காக வைத்திருந்த பாயாசத்தைக்கொடுத்து உபசரிக்கிறாள். முத்துமாணிக்கமும் அவர் மனைவியும் ஆத்திரத்தின் உச்சிக்குப்போகின்றனர். ஆனால் பாட்டியை ஒன்றும் செய்ய முடியவில்லை. தனியொரு பெண்ணாக நின்று துணிச்சலாக செயலில் இறங்கி, சாதித்துக்காட்டியிருக்கும் தீபாவின் மீது பாட்டிக்கும் துளசிக்கும் ரொம்பவே மதிப்பு ஏற்படுகிறது. |
![]() |
![]() |
#4 |
|
புவியரசு மனைவி கோபம் கொன்டு அப்பா வீட்டிற்கு வந்து விடுகிறாள். அப்பாவோ தன் மகள் செய்வது தவறு என்று கருத்து கூறுகிறார். உன் மாமியார் வீட்டு ப்ரச்சனைய இங்கு சொல்லாதே. அது உன் வீடு ,உன் குடும்பம் என்று பிரச்சனையை சொல்ல விட வில்லை. நான் இங்கு இரண்டு நாள் தங்கி செல்கிறேன் என்றதற்கு உன் புருஷனோடு த்ங்கு தனியாக வராதே என்று அப்பா கூறி விட்டார். பின் கண வன் வருகிறான். பேசுகிறான். தமிழிடம் அம்மா பேசுகிறாள். என்ன ப்ரச்சனை என்று கேட்கிறாள். அம்மாவிடம் ஏதோ சொல்லி மழுப்பி விட்டான்.
|
![]() |
![]() |
#5 |
|
'தென்றல்'
தயாரிப்பு : விகடன் டெலிவிஸ்டாஸ் ஒளிபரப்பு: சன் தொலைக்காட்சி இயக்கம் : எஸ்.குமரன் நடிகர் / நடிகையர் : தீபக், 'நிழல்கள்' ரவி, ஸ்ருதி, சுபலேகா சுதாகர், எஸ்.என்.லட்சுமி, சாதனா, ராஜசேகர், நீலிமா, கே.ஆர்.வத்சலா.... மற்றும் பலர். ஒளிபரப்பு நேரம் : திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 9.00 மணிக்கு. (விடுமுறை நாட்களில் 'திரைக்கு வந்து சில மாதங்களே ஆன' திரைப்படங்கள் இந்த நேரத்தை ஆக்ரமித்துக்கொள்ள வாய்ப்புண்டு). Thendrall - Title Song |
![]() |
![]() |
#6 |
|
பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற துளசியை மேற்படிப்பு படிக்க விடாமல் வீட்டில் முடக்கி விட்டு, அதற்குமாறாக குறைந்த மதிப்பெண்ணில் பாஸாகியிருக்கும் மகனை, லஞ்சம் கொடுத்து கல்லூரியில் சேர்க்க முயற்சிக்கின்றனர். லட்சக்கணக்கில் பணத்துக்கு எங்கே போவது?. துளசியை ஒரு பெண்பித்தனுக்கு விலைபேச முடிவெடுக்கின்றனர். யார் அந்த பெண்பித்தன்...?.
வாகன ஓட்டுனர் உரிமம் (தமிழில்: ட்ரைவிங் லைசன்ஸ்) வழங்கும் ஆர்.டி.ஓ. அதிகாரி வேலாயுதம் (நிழல்கள் ரவி), ஒரு அதிகாரி மட்டுமல்ல, லஞ்சப்பேய். வட்டிக்குப்பணம் கொடுத்து வறுமையில் வாடுவோரின் வாட்டத்தைப்பயன்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொள்ளும் ஒண்ணாம் நம்பர் சுயநலவாதி. நாற்பத்தைந்து வயதான அவனது முதல் மனைவி இறந்துவிட்டாள். (தீயிலிட்டுக்கொன்று விட்டானாம், வசனத்தில் வருகிறது. ஒருவேளை பின்னர் காண்பிக்கப்படக்கூடும்). அந்த வட்டிப்பேயிடம் ஏற்கெனவே தன் வீட்டை அடகு வைத்து முத்துமாணிக்கம் நிறைய கடன் வாங்கியிருக்கிறார். மேற்கொண்டு தன் உதவாக்கறை மகனின் படிப்புக்காக ஐந்து லட்சம் கேட்கப்போக, வேலாயுதம் அவருடைய கணக்குகளைப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாணிக்கம் வாங்கிய கடன் வட்டியோடு சேர்ந்து, வீட்டின் மதிப்பைத் தாண்டி விட்டதாகச்சொல்ல ஏமாற்றத்துடன் திரும்புகிறார். இதனிடையே, ஏதோ வேலையாக ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் துளசி, பெண்பித்தனான வேலாயுதத்தின் கண்ணில் பட்டுவிடுகிறாள்... போச்சு... அவள் யாரென்று அங்கிருப்போரை விசாரிக்க, அவள் முத்துமாணிக்கத்தின் மகள் என்று தெரிகிறது. வீட்டுக்குப்போகும் வேலாயுதம் தன் அக்காவிடம் விஷயத்தைச் சொல்வதுடன், முத்துமாணிக்கத்தை அழைத்து பேரம் பேசுகிறான். என்ன பேரம்..?. உன் கடன்களைத் திருப்பித்தர வேண்டாம். வீடு உன்னிடமே இருக்கட்டும். மேற்கொண்டு பையனின் படிப்புக்கும் ஐந்து லட்சம் தருகிறேன். இவையெல்லாவற்றுக்கும் பதிலாக அவரது மகள் துளசியை, தனக்கு மணமுடித்துத் தரவேண்டும் என்பதுதான் அந்த பேரம். முத்துமாணிக்கத்துக்கு வாயெல்லாம் பல். பின்னே..? ஒரு கல்லில் பல மாங்காய்கள் விழுகிறதே. |
![]() |
![]() |
#8 |
|
![]() ------------- தீபா, துளசியின் வகுப்புத்தோழி. அவளைப்போலவே படிப்பில் படு சுட்டி. இங்கே துளசி முதல் மதிப்பெண் வாங்கியதை கொஞ்சம் கூட வீட்டிலுள்ளோர் கண்டுகொள்ளாத நிலையில், தீபாவின் வீட்டிலோ அவள் சிறப்பான மதிப்பெண்களுடன் பாஸானதுக்காக அவளது அப்பா (ராஜசேகர்) ஒரு ஸ்கூட்டரையே வாங்கி பரிசளிக்கிறார். இத்தனைக்கும் அவர் பணக்கார தொழிலதிபர் அல்ல. முத்துமாணிக்கத்தைப் போலவே அவரும் கடின உழைப்பாளி, அன்றாடங்காய்ச்சி. வேன் டிரைவராக மாதச்சம்பளத்தில் பணியாற்றுபவர். அப்படியிருந்தும், தன் கஷ்ட்டங்களுக்கு நடுவில் மகளுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்க காரணம், அவர் பெண்களின் முன்னேற்றத்தை விரும்புபவர், தன் மகள் நன்றாகப்படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை உள்ளவர். (இந்த எபிஸோட் ஒளிபரப்பான அன்று, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ததாகச் சொன்னார்கள். பின்னே, ஒரு டிவி சீரியலில் ஒரு ஆம்பிளையை நல்லவன் என்று காண்பித்தால் மழை பெய்யாதா என்ன?). தீபாவாக நடிக்கும் பெண் ஏற்கெனவே 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவர். துருதுருன்னு இருப்பார். பெயர்தான் தெரியவில்லை. தெரிந்தவர்கள் இங்கே சொல்லுங்கள். தீபா, துளசியை அவள் வீட்டில் சந்தித்தபோது, துளசியின் முன்னேற்றத்திலோ, அவளது மேற்படிப்பிலோ துளசியின் குடும்பத்தார் (பாட்டியைத் தவிர) அக்கறை காட்டவில்லை என்பதோடு அவளை வீட்டில் முடக்கிப்போட்டுவிட்டு, மகனை மட்டும் படிக்க வைக்க முயற்சிப்பது தெரிய வருகிறது. எனவே நிச்சயம் துளசியின் பெற்றோர் துளைசியின் மேற்படிப்புக்காக ஒரு பைசா செலவழிக்க மாட்டார்கள் என்பதையறிந்த தீபா, தன் பள்ளி தலைமை ஆசிரியை மூலமாக இலவசமாக துளசியின் மேற்படிப்புக்கு முயற்சிக்கிறாள். அவளது முயற்சியில் துளசிக்கு அரசின் இலவசக்கல்வி திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. இதைத்தெரிவிக்க துளசியும் பாட்டியும் கோயிலுக்குப்போயிருக்கும் நேரத்தில் தலைமை ஆசிரியை துளசியின் வீட்டுக்கு வந்து அவளது சித்தியிடம் விவரத்தைச்சொல்லி, அதற்கான உத்தரவையும் கொடுத்து, தான் அன்று மாலையே திருநெல்வேலிக்கு மாற்றலாகி போவதாகவும், துளசிக்கு தனது வாழ்த்துக்களைச் சொல்லும்படியும் சொல்லி விட்டுப்போக, சித்தியின் மனதில் குரூர எண்ணம். 'துளசி மேற்கொண்டு படிப்பதா?. அப்படியானால் துளசியை வேலாயுதத்துக்கு விற்று அந்தப்பணத்தில் தன் மகனைப்படிக்க வைக்க தானும் கணவனும் போட்ட திட்டம் என்னாவது?' என்ற கொடூர புத்தியுடன் அந்த உத்தரவைக் கிழித்துப்போடுகிறாள். ஆக துளசியின் மேற்படிப்புக்கு அரசு உதவி கிடைத்த விவரம் யாருக்கும் (பாட்டிக்கோ அல்லது தீபாவுக்கோ கூட) தெரியாமல் முடங்கிப்போகிறது. துளசிக்கும் வேலாயுதத்துக்கும் திருமணம் முடிவாகியிருக்கும் விவரம் துளசிக்கும் பாட்டிக்கும் தெரியப்படுத்தாமலே, வேலாயுதமும் அவன் அக்காவும் துளசியை பெண் பார்க்க வர அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வர பாட்டி கொதிக்கிறாள். துளசியோ செய்வதறியாது சோர்ந்துபோகிறாள். வேலாயுதம் போனபின், 45 வயது முக்கால் கிழவனுக்கு 20 வயது துளசியை திருமணம் செய்ய சம்மதிக்க முடியாதென்றும் துளசியை மேல்படிப்பில் சேர்க்குமாறும் பாட்டி தன் மகன் முத்து மாணிக்கத்துடன் சண்டை போடுகிறாள். ஆனால் முத்துமாணிக்கம் கேட்கவில்லை. வேலாயுதம் தரும் பணம் அவர் கண்களை மறைக்கிறது. இதனிடையே தன்னை கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்யும் தந்தையிடம் தீபா, தன் தோழி துளசிக்கும் சேர்த்து ஒரு சேர்க்கை விண்ணப்பம் (தமிழில்: அட்மிஷன் பார்ம்) வாங்கிவரச்சொல்ல அப்பாவும் வாங்கிவருகிறார். அதை துளசியிடம் கொடுக்க தீபா போகும்போது, துளசியை சந்திக்க விடாமல் தடுக்கும் சித்தியின் தடையையும் மீறி தீபா துளசியை சந்திக்க, அப்போதுதான் துளசியின் மீது திணிக்கப்படும் கல்யாண ஏற்பாடு தீபாவுக்கு தெரிகிறது. அதை எதிர்த்து துளசியின் அப்பா மாணிக்கத்திடம் தீபா பேச, தங்கள் குடும்ப விவகாரத்தில் தலையிட அவளுக்கு உரிமையில்லையென தீபாவை அப்பாவும் சித்தியும் விரட்டியடிக்கின்றனர். |
![]() |
![]() |
#9 |
|
தீபா சோர்ந்து விடவில்லை. தன் தோழிக்கு அவளுடைய குடும்பத்தாராலேயே நேர இருக்கும் கொடுமையில் இருந்து அவளைக்காப்பாற்றி, அவளது மேற்படிப்புக்கனவை நிறைவேற்ற என்னவாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறாள். இதனிடையே சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல என்று (தவறாக) கணக்குப்போடும் துளசி நேரடியாக வேலாயுதத்தை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்து, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென்று சொல்லி நிச்சயதார்த்த புடவையை திருப்பிக்கொடுக்க, அவன் வெகுண்டு போய், அவள் வீட்டுக்குத்திரும்பிப் போவதற்குள்ளாக முத்துமாணிக்கத்துக்கு போன் செய்து, நடந்த விவரத்தைக்கூறி மாணிக்கம் தன்னை ஏமாற்ற நினைப்பதாகக்கூற, கோபத்துடன் வீட்டுக்குப்போகும் மாணிக்கம் தன் மகள் துளசியை பெல்ட்டால் அடித்து விளாசுகிறார். பாட்டியெல்லாம் தடுத்தும் கேட்கவில்லை. ஆனால் பின்னர் மாணிக்கத்தின் மனைவி, அவர் செய்தது தப்பு என்றும், இவ்வாறு பெல்ட்டால் அடிப்பது இனியொருமுறை தொடர்ந்தால் துளசி இரண்டிலொரு முடிவெடுப்பாள், ஒன்று வீட்டை விட்டு ஓடிவிடுவாள் அல்லது தற்கொலை செய்துகொள்வாள் இந்த இரண்டில் எது நடந்தாலும் தங்களுக்கு நஷ்ட்டம்தான். துளசி தனக்கு கிடைக்காத பட்சத்தில் வேலாயுதம் தங்கள் மீது எந்த இரக்கமும் காட்டாமல், கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயைப்பிடுங்கிக் கொள்வதுடன் பழைய பாக்கிக்காக வீட்டையும் எடுத்துக்கொண்டு தங்கள் எல்லோரையும் தெருவில் விட்டுவிடுவான் என்று எச்சரிக்க அப்போதுதான் துளசியை அடித்தது எவ்வளவு பெரிய தவறு என்று (பாசத்தால் அல்ல சுயநலத்துக்காக) உணர்கிறார்.
இந்தச்சமபவத்திலிருந்து துளசியை மீளச்செய்ய அடுத்த த்ந்திரமாக, அவளிடம் சென்று ரொம்ப பவ்யமாகப் பேசுகிறார். அவளுடைய அம்மா ஓடிப்போனதிலிருந்து தான் பட்ட அவமானங்களுக்கு மத்தியில் அவளை வளர்த்து ஆளாக்க தான் மேற்கொண்ட கஷ்ட்டங்களையெல்லாம் சொல்லப்போக, துளசிக்கு அப்பாவின் மேல இரக்கம் வருகிறது. தன் மகன் நடிக்கிறான் என்பது பாட்டிக்குத் தெரிகிறது. ஆனாலும் துளசி இந்த (கொடுமையான) திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். மாணிக்கம் போனபின்னர், அவர் நடிப்பதாகவும் அதைநம்பி மோசம் போக வேண்டாமென்றும் தன்னிடம் சொல்லும் பாட்டிடம் துளசி, அவர் நடிப்பது தனக்கும் தெரியுமென்றும், தான் வேலாயுதத்தை மணக்க சம்மதித்ததன்மூலம், தன் தாயால் இந்தக்குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க தன்னால் செய்ய முடிந்த பரிகாரமே இந்த தியாகம் என்றும் சொல்கிறாள். ஆனாலும் பாட்டி சமாதானம் ஆகவில்லை. துளசி - வேலாயுதம் திருமணம் நடக்கவே கூடாதென்று ஒரே உறுதியாக நிற்கிறாள். திருமணத்துக்கு துளசி சம்மதம் தெரிவித்து விட்ட செய்தி வேலாயுதத்துக்கும் அவன் அக்காவுக்கும் சொல்லப்பட, வேலாயுதம் மகிழ்ச்சியில் அலைமோதுகிறான். பட்டுப்புடவை, ஏராளமான நகைகள் இவற்றையெல்லாம் வாங்கி வந்து கொடுத்து அவைகளை அணிந்துகொண்டு தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துச்செல்கின்றனர். அங்கே மணப்பெண் போல புடவை நகைகளால் துளசியை அலங்கரித்து ஸ்டுடியோ போட்டோகிராபரை அழைத்து வந்து பலகோணங்களில் துளசியை போட்டோ எடுக்கின்றனர் (திருமண அழைப்பில் போடுவதற்காம்). தம்பியின் அக்கிரமங்களுக்கெல்லாம் துணை போகும் அக்கா (வத்சலா), அவளுக்கு நியாயங்களை எடுத்துச்சொல்லி மூக்குடைபடும் ஒரு பவர் இல்லாத கணவர். அங்கே போட்டோ ஸ்டுடியோவில் துளசியின் போட்டோ வேறு ஒருவர் கையில் மாறிப்போகிறது. யாரந்த வேறு ஒருவர்....?. தனியார் பேங்கில் லோன் செக்ஷனில் பணிபுரியும் ஆனந்த் (தீபக்), ஸ்டுடியோவில் போட்டோ ஒன்றை பிரிண்ட் போடக்கொடுக்க, ஸ்டுடியோ சிப்பந்தி கவனக்குறைவால் துளசியின் போட்டோக்கள் அடங்கிய கவரை அவனிடம் கொடுத்து விட, அவசரத்தில் பிரித்துப்பார்க்காமல் வாங்கிச்செல்லும் ஆனந்த், அதை தன் சட்டைப்பையில் வைத்திருக்க, அண்ணனின் சட்டைகளை சலவைக்கு எடுக்கும் அவன் தங்கை (நீலிமா) அந்தபோட்டோக்களைப் பார்த்துவிட்டு (அதுவரை அவள் அண்ணனே அவற்றைப்பார்க்கவில்லை), தன் அண்ணன் அந்தப்பெண்ணைக் காதலிப்பதாகவும், தனக்கு வரப்போகும் 'அண்ணி' (?) ரொம்பவே அழகாக இருப்பதாகவும் நினைத்து அண்ணனை சீண்டுகிறாள். அவள் சொல்லும் அந்த புதிய அண்ணி மேட்டர் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது..... |
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#12 |
|
Thanks Madhu Sree, for your welcome. pl.visit often and post your views.
Thanks Harihalan, for your clarification... After you told, yes, I remember that girl Hema. She was dancing in Jodi No. 1, in 'that' controvercial episodes judged by Simbu, Sangeetha and Sundaram master. Her face was familier to me, but not able to identify soon. Now I have been cleared by you. |
![]() |
![]() |
#13 |
|
போட்டோவைக் காண்பிக்காமலேயே தங்கை, அண்ணியைப்பற்றிப்பேச ஆனந்துக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் போட்டோவைக்காட்டி அவள் கேட்டபோதும்கூட அவன் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. போட்டோக்களை ஸ்டுடியோவில் திருப்பிக்கொடுக்கும்போது, ஆனந்த்துதான் போட்டோவை மாற்றி எடுத்துச்சென்ற ஆள் என்பது வேலாயுதத்தின் டிரைவரும் கையாளுமாக இருப்பவனுக்கு தெரியவருகிறது. (கையாள்..?. ஆம், பெயருக்கு அரசாங்க அதிகாரியாக இருந்தபோதிலும் அவனுக்குப் பக்கபலமாக ஒரு ரவுடிக்கூட்டம் எப்போதும் அவன் பின்னேயே இருக்கிறது). அத்துடன் துளசியை வேலாயுதத்தின் காரில் அழைத்துச்செல்லும்போது கார் ஆனந்தின் சிறிய பைக்கில் மோதிவிட, அப்போதும் அந்த டிரைவர் ஆனந்தை அடையாளம் கண்டு அவன் பைக் சாவியைப்பிடுங்கி காரில் வைத்துக் கொண்டு செல்லும்போது, சாவியைக்கேட்டு ஆனந்த கார் பின்னேயே ஓடி வருவதைக்கண்ட துளசி, டிரைவருக்குத்தெரியாமல் சாவியை எடுத்து வெளியே வீசுகிறாள். அப்போது அவளும் ஆனந்தைப்பார்க்க, ஆனந்தும் அவளைப்பார்த்து விடுகிறான்.
துளசியின் போட்டோக்கள் எல்லாம் வேலாயுதத்திடம் திரும்பி விட்டபோதிலும், ஒரே ஒரு போட்டோ மட்டும் ஆனந்திடம் தங்கிவிடுகிறது. அதை திரும்ப திரும்ப பார்க்கும் ஆனந்துக்கு துளசியின்மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. போதாக்குறைக்கு அவன் தங்கை வேறு எப்போதும் அவளைப்பற்றி 'அண்ணி' 'அண்ணி' என்றே பேசி, அவன் ஆசைக்கு தூபம் போடுகிறாள். சொல்லப்போனால் துளசி தனக்கு மனைவியாக வரவேண்டும் என்ற ஆனந்தின் ஆசையைவிட, அவள் தங்கள் வீட்டுக்கு அண்ணியாக வரவேண்டும் என்ற அவளது ஆசைதான் பலமாக இருக்கிறது. (இப்படிப்பட்ட தங்கைகள் கிடைக்க அண்ணன்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்). எனவே துளசியைப்பற்றி விவரங்கள் சேகரிக்க ஸ்டுடியோ செல்லும் அவள், அங்கிருப்பவன் ஒரு சினிமா சான்ஸுக்காக அலையும் நபர் என்று தெரிந்துகொண்டு, தான் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்று புளுகிக்கொண்டு அவனிடம் துளசியைப் பற்றிய அட்ரஸ் முதலான விவரங்கள் சேகரிக்கிறாள். (ரொம்ப நாளைக்குப்பிறகு நீலிமாவுக்கு ரொம்ப நல்ல ரோல். சரியாகச் சொன்னால் 'ரெக்கை கட்டிய மனசு', 'மெட்டி ஒலி' சீரியல்களுக்குப்பிறகு என்று சொல்லலாம். இடையில் எல்லாம் நெகடிவ் ரோல் பண்ணி தாய்க்குலத்தின் பார்வையில் ஒரு 'பெண் நம்பியாராக' உலா வந்தார். இந்தத் தொடரில் பாஸிடிவ் ரோல் பண்ணுவதாலோ என்னவோ நம் மனதில், (தேங்காய் சீனிவாசன் பாணியில்) 'பச்சக்க்'என்று ஒட்டிக்கொண்டு விடுகிறார். துளசி அண்ணியானபின், நாத்தனார் வேலையைக் காட்டாமல் இருந்தால் சரி). டிரைவர் மூலமாக ஆனந்த் பற்றி தெரிந்துகொள்ளும் வேலாயுதத்தின் குறுக்குப்புத்தி வேலை செய்கிறது. அதன் மூலம் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறான். ஆனந்துக்கும் துளசிக்கும் முன்பே தொடர்பு இருக்கிறது என்றும், அதனால்தான் அவள் தன்னுடன் கல்யாணம் வேண்டாம் என்று தன்னிடமே வந்து சொன்னாள் என்றும், போட்டோ மாறியது தற்செயலான நிகழ்ச்சி அல்ல, இருவரின் திட்டமிட்ட செயல் என்றெல்லாம் கண்க்குப்போட்டு, அவன் மனதிலேயே ஆனந்தை துளசியின் காதலனாக கற்பனை செய்துவைத்துக்கொண்டு, ஒவ்வொரு நடப்பையும் அந்தக்கண்ணோட்டத்திலேயே பார்க்கிறான். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தை தன் அக்காவிடமும், துளசியின் அப்பா, சித்தி ஆகியோரிடமும் சொல்கிறான். என்னதான் துளசி அவர்களுக்கு வேம்பாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் அவள் அப்பாவும், சித்தியும் நம்ப மறுப்பதோடு, துளசி அப்படிப்பட்டவள் அல்ல என்று வேலாயுதத்திடம் அடித்துப் பேசுகின்றனர். அதில் ஆச்சரியமில்லை. துளசியின் கள்ளம் கபடமற்ற, அப்பிராணியான முகத்தைப்பார்க்கும் யாருக்கும் இப்படி பழி சுமத்த மனம் வராது. |
![]() |
![]() |
#14 |
|
Little diversion from Storyline. A word about the Heroine...
'துளசி'யாக ஸ்ருதி சமீபகால தொலைக்காட்சி சீரியல்களில் இருந்து 'தென்றல்' சற்று விலகித்தெரியக் காரணம், அதில் நம்மில் ஒருத்திபோல உலாவரும் யதார்த்தமான கதாநாயகி. சீரியல் கதாநாயகி என்றாலே அவள் எல்லாம் தெரிந்தவள், எதற்கும் யாரையும் எதிர்பார்க்காதவள், மற்றவர்கள்தான் அவளை எதிர்பார்க்கவேண்டும் என்ற நிலையில் தன்னை வைத்திருப்பவள், எந்தப்பிரச்சினையையும் சமாளிக்கத்தெரிந்தவள், எத்தகைய குற்றங்களையும் மன்னிப்பவள், எல்லாவற்றிலும் பெருந்தன்மையைக் கையாள்பவள், மற்ற பாத்திரங்களால் அவள் கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைத்துப் புகழப்படுபவள், யார் தன் தலையில் மண்ணை வாரிக்கொட்டினாலும் சிரித்துக்கொண்டே பொறுமை காப்பவள், யார் எதைக்கேட்டாலும் உடனே கொடுத்துவிடும் கர்ணனின் கொள்ளுப்பேத்தி .... என்பது போன்ற இன்ன பிற "புளித்துப்போன" குணாதிசயங்களால் கதாநாயகிகள் காட்டப்பட்ட விதத்தால் வெறுத்துப்போய், இனிமேலாவது வானத்திலிருந்து 'தொபுக்கடீர்னு' குதித்த கதாநாயகிகளை விடுத்து, தாய் வயிற்றில் பத்து மாதம் சுமக்கப்பட்டு பிறந்த சாதாராண கதாநாயகியைக் காட்டுங்கப்பா என்ற சீரியல் அபிமானிகளின் ஏக்கத்தைப்போக்க வந்த சாதாரண பெண்தான் இந்த துளசி. இவள் அப்பா மற்றும் சித்தியின் கொடுமைகளுக்கு பயந்தவள். பாட்டியின் துணையே பெரிய ஆறுதலாக இருப்பதால் அவளையே அண்டியிருக்கும் பரிதாபத்துக்குரிய ஜீவன். பள்ளியிலேயே முதல் மாணவியாக தேறியிருந்தும் தன் தாய் செய்த தவறினால், அப்பா, சித்தி இவர்களை எதிர்த்துப்பேச முடியாமல், யார் மூலமாவது தனக்கு விடிவு கிடைக்காதா என்று தவிக்கும் ஒரு கையாலாகாத பேதைப்பெண். தன்னைவிட சின்னவனான தன் சித்தியின் மகன் தம்பி, தன்னை கைநீட்டி அடிப்பதைக்கூட தடுக்க திராணியில்லாத ஒரு அப்பாவிப்பெண்..... இப்படி ஒருத்தியை கதாநாயகியாக சீரியலில் பார்த்ததும், 'அப்பாடா இனி எர்குலஸ் நாயகிகளிடம் இருந்து சற்று விடுதலை' என்று ஆசுவாச பெருமூச்சு மக்களிடம் இருந்து. இன்னொரு விதத்திலும் தென்றல் நாயகி வேறுபடுகிறாள். சமீப சீரியல்களை எடுத்துக்கொண்டால் எல்லாவற்றிலும் (அல்லது பெரும்பாலானவற்றில்) நாயகியாக வருபவர், திரையுலகில் மார்கெட்டை இழந்த, அல்லது இழந்துகொண்டிருக்கும் நாயகிகளில் ஒருவர். ஏற்கெனவே பெரிய திரையில் பார்த்து சடைந்து போயிருக்கும் வேளையில், சின்னத்திரை மூலமாகவும் நம் வீட்டுக்கூடத்துக்கு வந்து படுத்துவார்கள். ஒன்றில் ராதிகா என்றால், இன்னொன்றில் தேவயானி, மற்றொன்றில் மீனா, பிரிதொன்றில் கௌசல்யா, வேறொன்றில் சங்கவி, அடுத்து ஒன்றில் சீதா, இன்னொன்றில் ரம்யாகிருஷ்ணன், வேறொன்றில் குஷ்பூ... இப்படி இவர்களில் ஒருவரை மையமாக வைத்துக்கொண்டு மற்றவர்கள் 'டம்மி'யாக இவர்களை சுற்றி வருவார்கள். இந்நிலையில் முதிர்கன்னிகளையும் திருமதிகளையும் மாணவிகள் என்று சொல்லி நம்மைப் படுத்தாமல், அழகான இளம்பெண்ணாக, நம் கண்முன்னே வளையவரும் சிட்டுப்போல துரு துரு பருவமும், மான்போல மருளும் விழிகளுமாக "ஸ்ருதி" என்ற இளம் மொட்டை, கதாநாயகி துளசியாக அறிமுகம் செய்த இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும். |
![]() |
![]() |
#16 |
|
aanaa & Sanjeevi, thanks for your posts...
இதற்கு முந்திய சில பதிவுகளில் சிறு தவறு நிகழ்ந்துள்ளது. பாங்கில் பணிபுரியும் தீபக்கின் பெயர் ஆனந்த் அல்ல, தமிழரசு. அவனது போலீஸ்கார நண்பன் பெயர்தான் ஆனந்த். தமிழரசு தன் வங்கி உத்யோகத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாகவும், அசால்ட்டாகவும் இருக்கிறான். அவனால் லோன் வழங்க சிபாரிசு செய்யப்பட்ட சிலர் கடனை அறவே திருப்பிக்கட்டவில்லை. இருந்தாலும் அவன் மேல் தீவிர நடவடிக்கை எடுக்காமல், அவனது மேனேஜர் (லொள்ளுசபா சுவாமினாதன்) அக்கறையாக அட்வைஸ் பண்ணுகிறார். அவன் காதில் போட்டுக்கொள்வதாக இல்லை. அவன் போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறான். மேனேஜர் உள்ளுக்குள் கவலைப்படுகிறார். இதனிடையே வேலாயுதம், தான் முக்கால் கிழவன் என்பதையும், இது தனக்கு இரண்டாவது திருமணம் என்பதையும் மறந்து தன் திருமணத்துக்காக தடபுடலாக ஏற்பாடு செய்கிறான். அதன் முதல்கட்டமாக தன்னுடைய இளம் வயது போட்டோவையும், துளசியின் போட்டோவையும் இணைத்து பெரிய பேனர்கள் தயார் செய்து, தன் வீட்டு வாசலிலும், தன் அலுவலக காம்பவுண்ட்டிலும் வைக்கிறான். பைக்கில் போகும்போது தற்செயலால அந்த பேனரைப்பார்க்கும் தமிழரசுக்கு, தான் விரும்பும் பெண்ணுக்கும் இன்னொருத்தனுக்கும் திருமணமா என்று அதிர்ச்சி ஏற்படுகிறது. உடனே தன் தங்கைக்கு போன் செய்து தான் பார்த்த விவரத்தைச்சொல்கிறான். தீபா, சும்மா இருக்கவில்லை. ஆட்டோ ஓட்டும் தன் இன்னொரு தோழியுடன் சேர்ந்து, வேலாயுதத்தின் இறந்துபோன முதல் மனைவியின் அம்மாவை சந்தித்து, அவருடைய மகள் எப்படி இறந்தாள் என்ற விவரம் சேகரிப்பதுடன், வேலாயுதத்தின் மீது ஒரு கம்பளைண்ட் கொடுக்கும்படி கூற, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கம்ப்ளைண்ட்டே வேலாயுதத்தின் பணபலத்தால் புஸ்வாணமாகி, முதல் மனைவி தீவிபத்தில் இறந்ததாக விசாரணையில் முடிவு செய்யப்பட்டதென்றும், வேலாயுதத்தின் பணபலம், அடியாள்பலத்துக்கு முன் மீண்டும் மோதி, உயிருடனிருக்கும் தன் இன்னொரு மகளின் வாழ்வையும் பறிகொடுக்க விரும்பவில்லை என்றும் கூறி அவர்கள் இருவரையும் திருப்பியனுப்பி விடுகிறாள். ஏமாற்றத்துடன் திரும்பினாலும் தீபா சோர்ந்துவிடவில்லை. ஒரு பத்திரிகை நிருபரைச் சந்தித்து வேலாயுதத்தின் அக்கிரமங்களை வெளியாக்கி அவனுடைய முகத்திரையைக் கிழித்தெறிய யோசனை கேட்க, அவர் ஒரு யோசனை சொல்கிறார். வேலாயுதத்தின் தயவில் வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அக்கா, அவன் போடும் ஆட்டத்துக்கெல்லாம் துணை நிற்கிறாள். அதன் இன்னொரு கூத்தாக, திருமணத்துக்கு முன் மாப்பிள்ளைக்கு (??) தனியாகவும் பெண்ணுக்கு தனியாகவும் நலங்கு வைப்பதென்றும், நலங்கு முடிந்த இரண்டே நாட்களில் கல்யாணம் என்றும் முடிவு செய்து, முடிவை முத்துமாணிக்கம் வீட்டுக்குத் தெரியப்படுத்துகின்றனர். அவர்களுக்கு என்ன...? 'மாப்பிள்ளை' வேலாயுதம் எதுசொன்னாலும் ஓ.கே..?. அவனிடம்தானே அவர்களுக்குத் தேவையான வைட்டமின் 'ப' இருக்கிறது. |
![]() |
![]() |
#17 |
|
இதற்கு முன் பெரிய கூத்து நடக்கிறது. அதைக்கண்டிப்பாக சொல்லி சிரிக்க வேண்டும். துளசியை சந்தித்து தன் திட்டத்தைச்சொல்ல வேண்டும் என்று நினைக்கும் தீபா, ஏற்கெனவே அவள் அப்பாவும் சித்தியும் தன்னை அவர்கள் வீட்டுப்பக்கமே வரக்கூடாதென்று விரட்டிவிட்டதால், தான் சந்திக்கப்போகுமுன் முத்துமாணிக்கத்தையும் அவர் மனைவியையும் வீட்டிலிருந்து வெளியாக்க வேண்டுமென்பதற்காக, வேலாயுதத்தின் அக்காபோல போனில் பேசி அவர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு உடனடியாக வரச்சொல்ல, பணக்கார போன் ஆச்சே. பிடரியில் கால்பட ஓடுகின்றனர். அங்கே வேலாயுதமும் அக்காவும், அவளது டம்மி கணவரும் திருமண அழைப்பிதழ் டிசைன் பார்த்துக் கொண்டிருக்க, சரியாக அந்நேரம் அவர்கள் நுழைய, தான் தேர்ந்தெடுத்த டிசைனைக் காட்டுகின்றனர். பத்திரிகையைத் திறந்தாலே நாதஸ்வர இசை கேட்கும் டிசைன் அது (!!!!!!!, மனிதனின் ஆடம்பர வேட்கைக்கு அளவேது). அவர்களும் டிசைன் பிடித்திருப்பதாகச்சொல்ல, அப்போதுதான் அவர்கள் இரண்டு பேரும் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று கேட்க, அக்கா வரச்சொல்லி போன் செய்ததாகச்சொல்ல, தான் யாருக்கும் போன் பண்ணவேயில்லையே என்று அக்கா சொல்ல, அவ்வளவுதான் வேலாயுதம் ரௌத்ரமாகிறான். இது நிச்சயம் துளசியின் 'காதலன்'(?) வேலைதான், துளசியை வீட்டிலிருந்து கடத்துவதற்காக அவர்களிருவரையும் வெளியாக்க திட்டம் போட்டு செய்திருக்கிறான், இதற்கு துளசியும் உடந்தை என்று சொல்லி முத்துமாணிக்கத்தை வாய்க்கு வந்தபடி திட்டியபடி, தன் அடியாட்களுடன் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு துளசியின் வீட்டுக்கு காரில் பறக்கிறான். அங்கே வீடு பூட்டியிருக்கிறது. வேலாயுதத்தின் சந்தேகம் மேலும் வலுக்கிறது. தங்கள் மகள் துளசி அப்படிப்பட்ட பெண்ணில்லை என்று என்று மாணிக்கம் சொல்லியும் அவன் கேட்கிறபாடில்லை. அப்போது பக்கத்து வீட்டுப்பெண் வந்து பாட்டியும் துளசியும் கோயிலுக்குப் போயிருப்பதாக சொல்லி வீட்டுச்சாவியைக் கொடுக்க, உடனே வேலாயுதம் ரெண்டு தடியன்களை மட்டும் அங்கு விட்டு விட்டு மற்ற எல்லோரையும் அள்ளிக்கொண்டு கோயிலுக்கு வண்டியை விரட்டுகிறான்.
கோயிலை நெருங்கும் நேரம், அப்போது தன்னுடைய நண்பனுடைய பைக்கை இரவல் வாங்கி அதில் தன் தங்கையுடன் போய்க்கொண்டிருக்கும் தமிழரசை (தீபக்) வேலாயுதத்தின் டிரைவர் காண்பித்து, 'அண்ணே, இவன்தான் துளசியின் காதலன்' என்று சொல்ல, அப்போதுதான் வேலாயுதம் தமிழரசை முதன்முதலாகப் பார்க்கிறான். தன்னை விட மிக அழகாகவும், இளமையாகவும் இருக்கும் அவன்மீது துளசி விரும்பியது ஆச்சரியமில்லை என்று பொறாமையடைகிறான். (எல்லாம் அவன் கற்பனை. துளசி தமிழரசைப் பார்த்தது கூடக்கிடையாது). பைக்கின் பின்சீட்டில் சுடிதார் அணிந்து, தலைமுடி பறக்காமல் துப்பட்டாவால் தலையை முக்காடிட்டு அவன் தங்கை அமர்ந்திருக்க, அவள் முகத்தைப்பார்க்க முடியாத வேலாயுதம், 'ஐயோ பின்சீட்டில் துளசிதான் அமர்ந்து போகிறாள்' என்று கூறி பைக்கை, தன் காரால் விரட்டுகிறான். ஊகும்... பைக் எங்கோ சந்துகளில் புகுந்து மறைந்து விடுகிறது. இருந்தாலும் பைக் நம்பரை நோட் பண்ணியிருந்த வேலாயுதம், தன் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு அட்ரஸை விசாரிக்க, அங்கே போனால் தமிழரசின் நண்பன் சிலநாட்களுக்கு முன் அந்த வாடகை வீட்டை காலி செய்துகொண்டு போய்விட்டதாக அங்கிருப்பவர்கள் சொல்ல, வேலாயுதத்துக்கு ஏமாற்றம். ஆனால் மாணிக்கம் மட்டும் தன் மகள் அப்படியெல்லாம் போகக்கூடியவள் அல்ல, இந்நேரம் கோயிலில் இருந்து வீட்டுக்குத் திரும்பியிருப்பாள் என்று அடித்துச்சொல்ல, மீண்டும் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்தால், அங்கே வீட்டுச்சாவி இல்லாததால் வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் துளசியையும், பாட்டியையும் பார்த்ததும் வேலாயுதம் முகத்தில் லிட்டர் கணக்கில் விளக்கெண்ணெய் வழிகிறது. இருந்தாலும் துளசியின் மீதும், அவள் 'காதலன்'(??) மீதும் அவன் கொண்ட சந்தேகத்தை விடுவதாக இல்லை. கூடிய சீக்கிரமே அவளைத்தன் மனைவியாக்கி, இந்த சந்தேகத்துக்கு முடிவுகட்ட தீர்மானிக்கிறான். அதன் விளைவுதான் மேற்சொன்ன நலங்கு. |
![]() |
![]() |
#18 |
|
|
![]() |
![]() |
#19 |
|
|
![]() |
![]() |
#20 |
|
துளசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டாள் என்று தெரிந்தும் அவள் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் தீபா, தன் அப்பாவின் உதவியை நாடுகிறாள். அவரோ 'நீ அந்தப்பெண்ணுக்கும் சேர்த்து அப்ளிகேஷன் கேட்டேன்னு வாங்கி வந்தேன். மத்தபடி அவள் திருமணத்தை தடுக்கும் வேலையெல்லாம் செய்ய முடியாது. அது அவங்க குடும்ப விவகாரம், அதுபோக அவளும் இந்த திருமணத்துக்கு சம்மதித்த பிறகு நாம் அதில் நுழைய முடியாது. எல்லாத்துக்கும் மேலே, அந்த வேலாயுதம் மகா மோசமானவன். ஒரு ரவுடிக்கூட்டத்தையே கையில் வச்சிருப்பவன். இதில் நாம தலையிட்டோம்னு தெரிஞ்சா நம்ம குடும்பத்தை உண்டு, இல்லைன்னு பண்ணிடுவான்' என்று சொல்லி மறுத்து விடுகிறார். ராஜசேகர் சொல்வது முழுக்க முழுக்க ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இப்படி பல பக்கமும் தன் கோரிக்கைக்கு ஆதரவு மறுக்கப்பட்டபோதும் தீபா சளைக்காமல் தானே களத்தில் இற்ங்குகிறாள். அன்றைக்கு நலங்கு, அடுத்த் இரண்டு நாளில் திருமணம். அதற்குள் ஒரு முடிவு வந்தாக வேண்டும்.
'மாப்பிள்ளை(?)' வீட்டில் நலங்கு நடக்கிறது. விசேஷத்துக்கு வந்தவர்கள் வேலாயுதத்தின் முகத்துக்கு நேரே புகழ்ந்துவிட்டு, மறைவில் போய் கேலி பேசுகின்றனர். 'போயும் போயும் 45 வயசுல, அதுவும் ரெண்டாவது கல்யாணத்துக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் நலங்குக்கு உட்கார்ந்திருக்கான் பாரு' என்று கிண்டல் கணைகள் பறக்கின்றன. அக்காவும் அவனுடன் சேர்ந்துகொண்டு கூத்தடிக்க, அவள் கணவர் தலையில் அடித்துக்கொள்கிறார். அடுத்து பெண்வீட்டுக்குப்போய் துளசிக்கு நலங்கு வைக்க முற்படுகின்றனர். வேலாயுதம் வரவில்லை. ஆபீஸ் போய்விட்டு, சாப்பாட்டுக்கு முத்துமாணிக்கம் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும், இன்றைக்கு ஆபீஸ் போனால்தான், திருமணத்துக்குப்பின் தேனிலவு செலவுக்கு பணம் (லஞ்சம்) தேற்ற முடியும் என்றும் சொல்லிப்போகிறான். அங்கே துளசி வீட்டில் அவளுக்கு நலங்கு வைக்க ஏற்பாடு நடக்கிறது. முதல் ஆளாக வேலாயுதத்தின் அக்காவை நலங்கு செய்ய சித்தி அழைக்க, துளசி மறுத்து, பாட்டிதான் முதலில் தனக்கு நலங்கு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். அவள் திருமணத்துக்கு சம்மதித்ததே பெரிது, ஆகவே இந்த சின்ன விஷயத்திலெல்லாம் அவள் விருப்பப்படியே விடுவோம் என்று நினைக்கும் அப்பாவும் சித்தியும், முதலில் பாட்டியை அழைக்கின்றனர். இந்த திருமணத்தில் எள்ளளவும் விருப்பம் இல்லாத பாட்டி, தன்னையே அண்டியிருக்கும் பேத்தி துளசியின் விருப்பத்தை தள்ளமுடியாமல் முதலில் நலங்கு செய்கிறாள். பாட்டியைத்தொடர்ந்து ஒவ்வொருவராக துளசிக்கு நலங்கு செய்து வாழ்த்துகின்றனர். சடங்கு முடிந்து, மாணிக்கம் வீட்டில் வேலாயுதம் செலவில் தடபுடலாக விருந்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. விருந்துக்கு எல்லாம் தயார். வேலாயுதம் வந்ததும் பந்தி போட்டுவிட வேண்டியதுதான் என்ற நிலையில், அக்காவின் செல்போனில் இடியாகச்செய்தி வருகிறது. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 73 (0 members and 73 guests) | |
|