|
![]() |
#1 |
|
அன்னையின் ரூபமே ஆதிசக்தி
அகிலத்தை ஆளும் மகாசக்தி பக்தர்கள் துணையே பராசக்தி சரணம் சரணம் ஸ்ரீமாதா கருணைக்கடலே காமாக்ஷி உன் திருவடி என் கதி மீனாக்ஷி விரைந்தேன் உன்னிடம் விசாலாக்ஷி சரணம் சரணம் ஸ்ரீமாதா துக்கத்தை அகற்றிடும் ஸ்ரீதுர்கா கீர்த்தியை வழங்கிடும் ஸ்ரீவித்யா வெற்றியைத்தந்திடும் ஸ்ரீவிஜயா சரணம் சரணம் ஸ்ரீமாதா சாந்த ஸ்வரூபிணி சர்வாணி மங்களம் அளித்திடும் கல்யாணி நாடினேன் உன்னையே நாராயணி சரணம் சரணம் ஸ்ரீமாதா அன்பைப்பொழிவாய் பிரேமரூபா தரிசனம் தருவாய் விஸ்வரூபா மறவாதிருப்பேன் மஹாரூபா சரணம் சரணம் ஸ்ரீமாதா நம்பினேன் உன்னையே விஸ்வமாதா பணிந்தேன் உன்னிடம் சித்தமாதா ரக்ஷிப்பாய் எங்களை வீரமாதா சரணம் சரணம் ஸ்ரீமாதா சேவை புரிவேன் சித்தேஸ்வரி தேவை உன்னருள் மாஹேஸ்வரி பிறவாமை வேண்டும் புவனேஸ்வரி சரணம் சரணம் ஸ்ரீமாதா ஸ்ரீசிவசக்தி சர்வேஸ்வரி ஸ்ரீப்ரானரூபிணி பரமேஸ்வரி ஸ்ரீசக்ரனாயகி ராஜேஸ்வரி சரணம் சரணம் ஸ்ரீமாதா |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|